Home இந்தியா ராகுல் காந்தியிடம் 11 மணி நேரம் விசாரணை – மீண்டும் அழைக்கப்படுகிறார்!

ராகுல் காந்தியிடம் 11 மணி நேரம் விசாரணை – மீண்டும் அழைக்கப்படுகிறார்!

634
0
SHARE
Ad

புதுடில்லி : நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகம் வந்தடைந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடன் நேற்று திங்கட்கிழமை 11 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) மீண்டும் மத்திய புலனாய்வு அமைப்பிடம் வாக்குமூலம் வழங்க வருமாறு ராகுல் காந்தி அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் புதுடில்லி அமுலாக்க இயக்குநரகம் முன்பாக  காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

ராகுலின் தாயாரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.