Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : 27 ஜூன் முதல் 2 ஜூலை 2022 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : 27 ஜூன் முதல் 2 ஜூலை 2022 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

644
0
SHARE
Ad

astro-vinmeen-logo-01072021எதிர்வரும் 27 ஜூன் முதல் 2 ஜூலை 2022 வரை ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் இடம் பெறும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்:

திங்கள், 27 ஜூன்

வணக்கம் டாக்டர் (புதிய அத்தியாயம் – 9)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 9 மணி, திங்கள் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

தொகுப்பாளர்: டாக்டர் புனிதன் ஷான்

இவ்வார அத்தியாயத்தில் விளையாட்டு மருத்துவ நிபுணர், டாக்டர் மோகனகுமார் காளிமுத்து, விளையாட்டினால் ஏற்படும் காயங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிகளைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்வார்.

வியாழன், 30 ஜூன்

200 ஹல்லா ஹோ (200 Halla Ho) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அமோல் பலேகர், பருண் சோப்தி, ரிங்கு ராஜ்குரு & ப்ளோரா சைனி

ஒரு கும்பலால் பயமுறுத்தப்பட்ட பெண்களின் கதை.

வெள்ளி, 1 ஜூலை

1945 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்: ராணா டகுபதி

அன்பு மற்றும் துணிச்சல் கொண்ட ஓர் இந்தியத் தேசிய ராணுவ வீரர் ஆபத்தானக் கிளர்ச்சிக்கும் காலனித்துவவாதியின் பிடிக்கும் இடையில் சிக்கிக் கொள்கிறார்.

மோட்டு பட்லு vs டாக்டர் டிஸ்ட்ராயர் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), பிற்பகல் 2 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.
உயர் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்ட டாக்டர் டிஸ்ட்ராயர் எனும் வில்லன் விலைமதிப்பற்ற வைரத்தைத் திருடத் திட்டமிட்டபோது, அவரைத் தடுக்கச் சிறந்த நண்பர்களான மோட்டுவும் பட்லுவும் புறப்பட்டனர்.

சனி, 2 ஜூலை

ராப் போர்க்களம் சீசன் 2 (புதிய அத்தியாயம் – 5)

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, சனி|ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நீதிபதிகள்: யோகி பி & நவின் நேவிகேட்டர்
அறிவிப்பாளர்: எம்சி ஜெஸ்

வழிகாட்டுநர்கள்: செயின்ட் டிஎஃப்சி & ஷீசே

#ராப்இசைத்தொடரும் என்ற கருப்பொருளுடன் மலரும் இந்நிகழ்ச்சி, ஆர்வமுள்ள உள்ளூர் ராப்பர்கள் இத்தளத்தின் மூலம் அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் தங்களின் கனவுகளை அடையவும் வாய்ப்புகளை வழங்குகிறது.

இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்ட ராப்பர்கள் போட்டியில் ஈடுபடுவர். ராப்பர்களின் நீக்கமும் இடம்பெறும்.

*நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை