Home இந்தியா நரேந்திர மோடியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

நரேந்திர மோடியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

519
0
SHARE
Ad

புதுடில்லி : இன்று புதன்கிழமை புதுடில்லி வந்தடைந்த தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழ் நாடு மேம்பாடு குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகளைத் தொடக்கி வைக்க வருகை தந்ததற்காக பிரதமருக்கு ஸ்டாலின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மிகக் குறுகிய காலத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்ததற்காக தமிழ் நாட்டுக்கு பாராட்டு தெரிவித்த மோடி, இத்தகைய சிறப்பு ஏற்பாடுகளினால் இந்தியாவின் பெருமை ஓங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.