Home நாடு எஸ்ஆர்சி வழக்கு : நஜிப் மேல்முறையீடு தொடர்கிறது

எஸ்ஆர்சி வழக்கு : நஜிப் மேல்முறையீடு தொடர்கிறது

520
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : ஒருநாள் இடைவெளிக்குப் பின்னர் நஜிப் செய்திருக்கும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான ஊழல் வழக்கு மேல்முறையீடு இன்று வியாழக்கிழமை கூட்டரசு நீதிமன்றத்தில் தொடர்கிறது.

நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்  இந்த வழக்கில் நஜிப் மீது விதிக்கப்பட்டிருக்கும் தண்டனையை இரத்து செய்ய அவர் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் சம்பந்தப்பட்ட டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் ஊழல் வழக்கின் மேல்முறையீட்டில் சில முக்கிய மனுக்களை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இது நஜிப்புக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவு தனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக நஜிப் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

நஜிப் சமர்ப்பித்த புதிய ஆதாரங்களை ஏற்றுக் கொள்ளவும் கூட்டரசு நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை அடுத்து 3 அல்லது 4 மாதங்களுக்கு இந்த மேல்முறையீட்டு வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என நஜிப்பின் வழக்கறிஞர்கள் மனு ஒன்றைச் சமர்ப்பித்தனர். ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஆவணங்களைப் பரிசீலிக்க வேண்டியிருப்பதால் இந்த ஒத்திவைப்பு தேவை என நஜிப்பின் புதிய வழக்கறிஞர்கள் குழு மனு ஒன்றைச் சமர்ப்பித்தனர். அந்த மனுவையும் கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

ஏற்கனவே, திட்டமிடப்பட்ட தேதிகளில் மேல்முறையீட்டு வழக்கு நடைபெறும் என்றும் எந்தவொரு ஒத்தி வைப்புக் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் கூட்டரசு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கும் நஜிப்புக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது என கூட்டரசு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கின் மேல்முறையீடு இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் தொடர்கிறது.