Home நாடு வான் ஜூனாய்டி : “வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரே பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்பு”

வான் ஜூனாய்டி : “வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரே பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்பு”

500
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அக்டோபர் மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பாகத் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

எனினும் இது சாத்தியமில்லை எனக் கூறுகிறார் சட்டத் துறை அமைச்சர் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார். “என்னைப் பொறுத்தவரையில் பிரதமர் 2023-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எனவே, வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னால் பொதுத் தேர்தல் நடத்தப்படாது எனக் கருதுகிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

2023 வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் அக்டோபர் 28-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற அட்டவணைப்படி அறிவிக்கப்பட்டிருக்கிறது.