Home நாடு தலைமை நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது

தலைமை நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது

667
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட்-டுக்கு (படம்) மிரட்டல் விடுத்ததாக 30 வயது நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 19) இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தெங்கு மைமூனுக்கு எதிராக அச்சுறுத்தல்களைத் தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது.  அதன் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து, இரவு 11.15 மணியளவில் சிலாங்கூரில் உள்ள பூச்சோங்கில் உள்ள ஒரு இல்லத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மிரட்டல் பதிவேற்றம் செய்யப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கைப்பேசியையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

#TamilSchoolmychoice

இந்த விவரங்களை காவல் துறை அதிகாரி ஸ்கந்தகுரு ஆனந்தன் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று முதல் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 23) வரை நான்கு நாட்களுக்கு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்