Home கலை உலகம் பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகி ஷம்சாத் பேகம் மரணம்

பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகி ஷம்சாத் பேகம் மரணம்

554
0
SHARE
Ad

singerபுதுடெல்லி, ஏப். 24- இந்திப்படங்களின் ஆரம்ப காலத்தில் முன்னணி பாடகியாக திகழ்ந்த ஷம்சாத் பேகம் (படம்) இன்று அவரது மும்பை இல்லத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 94.

இவர் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 14-ல் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தார். நாடு விடுதலை அடைந்த 1947-ம் ஆண்டு பெஷாவர் வானொலி நிலையத்தில் ஒலிபரப்பப்பட்ட சுதந்திர கீதத்தை முதன்முதலாக பாடினார். இதன் மூலம் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரால் பாராட்டப்பட்டார். இதனைத் தொடர்ந்து தனது குரலால் மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.

ஷம்சாத் பேகத்தின் குரல்தான் 1950-ல் இருந்து 1970களின் ஆரம்பம் வரை இந்தி திரைப்படங்களிலும் ஆட்சி செய்தது. 2009-ம் ஆண்டு பத்மபூஷன் விருது பெற்ற இவர், கணவரின் இறப்புக்கு பின் மும்பையில் மகளுடன் வாழ்ந்து வந்தார். சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஷம்சாத் பேகம், மும்பையில் நேற்று மரணமடைந்தார்.