Home இந்தியா சோனியா-ராகுல் ஆலோசனை : மாணவர் காங்கிரஸ் கூட்டத்தில் தமிழக நிர்வாகிகள் பங்கேற்பு

சோனியா-ராகுல் ஆலோசனை : மாணவர் காங்கிரஸ் கூட்டத்தில் தமிழக நிர்வாகிகள் பங்கேற்பு

570
0
SHARE
Ad

sonia-and-ragulசென்னை, ஏப்ரல்  24- முன்னாள் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னாள் மாணவர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் மாணவர் காங்கிரஸ் தலைவர் ரோகித் சவுத்ரி தலைமையில் நடந்தது.

இதில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர். அப்போது சோனியா காந்தி பேசியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் காங்கிரசுக்கு எதிரான விமர்சனங்களை கண்டும் காணாமலும் விட்டு விடாதீர்கள். அதற்கு தக்கபதிலடி கொடுத்து எதிர்க்கட்சிகளின் எதிர்மறை பிரசாரங்களை முறியடிக்க வேண்டும் என்றார். காங்கிரசை குறை கூறி விமர்சிப்பவர்களை பார்த்து, இந்த நாட்டின் நிலைமையை மாற்றுவதில் நீங்களோ அல்லது உங்கள் கட்சியோ என்ன சாதித்து உள்ளது என்று திருப்பி கேளுங்கள். அவர்களிடம் இருந்து நிச்சயமாக நம்பகமான பதில் வராது என்றார்.

#TamilSchoolmychoice

கூட்டத்தில் இலங்கை பிரச்சினை குறித்த மாணவர்களின் போராட்டம், தீவிரவாதம், மதவாதம், கல்வி சீர் திருத்தம், வேலை இல்லா திண்டாட்டம், மாணவர் காங்கிரசில் புதிதாக இளைஞர்களை சேர்ப்பது, பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதம் நடந்தது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலங்களில் காங்கிரசுக்கு உழைத்த மாணவர் காங்கிரஸ் தலைவர்களுக்கு வருகிற பாராளுமன்ற தேர்தலில் போதிய முக்கியத்துவம் கொடுப்பது மாநிலங்களில் கட்சி பதவிகளில் உரிய பிரதி நிதித்துவம் வழங்குவது உள்பட கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து முன்னாள் மாணவர் காங்கிரஸ் தலைவர்கள் பட்டுக்கோட்டை ராஜேந்திரன், டாக்டர் செல்லக்குமார், விடியல்சேகர் நவீன் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, வயலார்ரவி, ஆனந்த் சர்மா முகுல்வாசனிக், அம்பிகா சோனி, நாராயணசாமி, ராஜஸ்தான் முதல்வர் அசோக்கேலட் உள்பட பலர் பேசினார்கள்.

தமிழக முன்னாள் மாணவர் காங்கிரஸ் தலைவர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் புகழ்பெற்ற தஞ்சாவூர் வேலைப்பாடு அமைந்த வெண்கல தாம்பூலம் தட்டை நினைவு பரிசாக சோனியா, ராகுல்காந்தி ஆகியோருக்கு வழங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாணவர் தலைவர்களுக்கும் சோனியா காந்தி நினைவு பரிசு வழங்கினார். சுமார் 3 மணி நேரம் இந்த கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.