Home நாடு “போதுமான எண்ணிக்கை இருக்கிறது! நாட்டை வழிநடத்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” – அன்வார் இப்ராகிம்

“போதுமான எண்ணிக்கை இருக்கிறது! நாட்டை வழிநடத்த வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” – அன்வார் இப்ராகிம்

479
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குள்ளாக யார் பிரதமராவதற்கும் அடுத்த ஆட்சி அமைப்பதற்கும் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருக்கிறார்கள் என்ற விவரம் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டுமென மாமன்னர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த விவரங்களை நாடாளுமன்ற அவைத் தலைவர் டான்ஸ்ரீ அசார் அசிசான் மூலமாகத் தன்னிடம் சமர்ப்பிக்குமாறும் மாமன்னர் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அடுத்த ஆட்சி அமைப்பதற்குத் தயார் என டான்ஸ்ரீ மொகிதின் யாசினும் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் எண்ணிக்கையும் இருக்கிறது! நாட்டை வழிநடத்த எனக்கொரு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” – என அன்வார் இப்ராகிம் தெரிவித்திருக்கிறார்.