Home நாடு சாஹிட் ஹாமிடி தலைமைத்துவத்திற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

சாஹிட் ஹாமிடி தலைமைத்துவத்திற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

430
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி, டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இல்லத்திற்கு வருகை தந்தது முதலே சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணி மொகிதின் யாசின் பிரதமராக ஆதரவு தெரிவிக்கும் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.

அதற்கேற்ப, பின்னர் பத்திரிகை அறிக்கை ஒன்றை விடுத்த அபாங் ஜொஹாரி ஜிபிஎஸ் கூட்டணி, பெரிக்காத்தான், தேசிய முன்னணி, பெரிக்காத்தான் நேஷனல், ஜிஆர்எஸ் இணைந்த கூட்டணி அடுத்த ஆட்சியை அமைக்கும் என அறிவித்தார்.

ஆனால், அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடியோ தேசிய முன்னணி ஜிபிஎஸ் கூட்டணியுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என மறுத்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் சாஹிட் பதவி விலக வேண்டும் என்ற நெருக்குதல்கள் அம்னோவில் இருந்தும், தேசிய முன்னணி உறுப்பியக் கட்சித் தலைவர்களிடம் இருந்தும் எழுந்திருக்கின்றன.