Home அரசியல் லகாட் டத்து ஊடுருவலை முக்கிய அம்சமாக வைத்து சபாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நஜிப்

லகாட் டத்து ஊடுருவலை முக்கிய அம்சமாக வைத்து சபாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நஜிப்

765
0
SHARE
Ad

najib

சபா, ஏப்ரல் 24 –  சபா மக்களை கவரும் நோக்கிலும், பொதுத்தேர்தலில் அவர்களை தேசிய முன்னணிக்கு சாதகமாக வாக்களிக்கச் செய்யும் வகையிலும், தற்போது பிரதமர் நஜிப் கையாண்டு வரும் ஒரு புதிய அரசியல் தந்திரம் என்ன வென்றால் ‘லகாட் டத்து ஊடுருவல்’ விவகாரம்.

கடந்த இரண்டு நாட்களாக சபா மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நஜிப், லகாட் டத்து ஊடுருவலைச் சமாளிக்க தேசிய முன்னணி அரசாங்கம் எடுத்துக்கொண்ட கடுமையான முயற்சிகளை தனது பிரச்சாரத்தில் முக்கிய அம்சமாக கூறிவருகிறார்.

#TamilSchoolmychoice

அதிலும் குறிப்பாக, லகாட் டத்து சண்டையில் உயிர் நீத்த பாதுகாப்புப் படை வீரர்கள் அனைவரும் பாசீர் மாஸ், பெசுட், கிள்ளான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து சபா மாநிலத்தை காப்பாற்றியுள்ளனர் என்றும் கூறிய நஜிப், பொதுத்தேர்தலில் சபா மக்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவாக அளிக்கும் வாக்கு, இந்நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் அளிக்கும் வாக்கு என்று கூறியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து அம்மாநில தேசிய முன்னணித் தலைவர் மூசா அம்மானும் சபா ஊடுருவலைத் தடுக்க மத்திய அரசாங்கம் எடுத்துக்கொண்ட அதிவேக முயற்சிகளைப் பற்றி பெருமையாக கூறிவருகிறார்.sabah

அத்துடன், சபா மாநிலத்தை கைப்பற்ற வரும் அந்நியர்களுடன் அவ்வபோது பேச்சுவார்த்தை நடத்தி வரும் பக்காத்தானை நம்ப வேண்டாம் என்றும் சபா மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், சபா ஊடுருவல் விவகாரத்திற்குப் பிறகு தேசிய முன்னணி மீது  சபா மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகமாகியுள்ளது என்று கூறிய நஜிப், நம்முடைய நாட்டின் பாதுகாப்பை மீண்டும் உறுதி செய்வதற்கு லகாட் டத்து விவகாரம் ஒரு காரணமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

‘கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்பது போல் ஊடுருவல் நடப்பதற்கு முன்னரே நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தாமல், சபாவில் அத்துமீறி நுழைந்த பலருக்கு அடையாள அட்டைகளை வழங்கிய தேசிய முன்னணி அரசாங்கம், தற்போது ‘சபா ஊடுருவலை நாங்கள் வெற்றிகரமாக முறியடித்து விட்டோம்’ என்று அதை ஒரு சாதனை போல் கூறிக்கொள்வது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.