Home இந்தியா சச்சின் 40-வது பிறந்த நாள்- ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

சச்சின் 40-வது பிறந்த நாள்- ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

600
0
SHARE
Ad

sachinகொல்கத்தா, ஏப்ரல் 24- கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் இன்று தனது 40-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். அவர் தனது பிறந்தநாளை தனது மனைவி அஞ்சலியுடன் இன்று கொல்கத்தாவில் கொண்டாடினார்.

5 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். தனது பிறந்தநாளை கொல்கத்தாவில் கொண்டாடுவது சிறப்பான அனுபவம் என்று கூறிய அவர், தனது ரசிகர்களின் அன்புக்காக நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.

சச்சினின் ரசிகர்களும் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். பல்வேறு முன்னணி கிரிக்கெட் வீரர்களும், தொழிலதிபர்களும், ரசிகர்களும் சச்சினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

#TamilSchoolmychoice

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். என்றாலும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். தெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தபோதிலும், அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்கும் தெண்டுல்கர் தனது பிறந்தநாளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.