Home நாடு 80 நெகிரி செம்பிலான் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் தேசிய மொழிப் பட்டறையில் பயன் பெற்றனர்

80 நெகிரி செம்பிலான் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் தேசிய மொழிப் பட்டறையில் பயன் பெற்றனர்

543
0
SHARE
Ad

சிரம்பான் : கடந்த 28 நவம்பர், 8 மணி முதல் 4 மணி வரை பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்பள்ளியில் நடைப்பெற்ற தேசிய மொழிச் சிறப்புப் பட்டறையில் நெகிரி செம்பிலானிலுள்ள 61 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 80 மலாய் போதிக்கும் ஆசிரியர்கள் மலாய் மொழி இலக்கணக் கூறுகளையும் நுணுக்கங்களையும் கற்றுப் பயன் பெற்றனர்.

இப்பட்டறையை புத்ரா பல்கலைக்கழகத்தைச் (யு.பி.எம்) சேர்ந்த பேராசிரியர் டாக்டர் விஜயலட்சுமி சுப்ரமணியம் வழிநடத்தினார். பேராசிரியர் டாக்டர் விஜயலட்சுமி சுப்ரமணியம் மற்றும் அவரது மாணவிப் பவித்ரா நாகராஜூ ஆகிய இருவரும் நடத்திய ஆய்வின் மூலம் உருவாக்கப்பட்ட ‘Dadu Gergasi Imbuhan Pendidikan Abad Ke-21’ மற்றும் ‘Alomorf Teknik GAD’ ஆகிய இரு முக்கிய மலாய் மொழி இலக்கண நுணுக்கங்கள், அவற்றைப் பயன்படுத்தும் மற்றும் புலமைப் பெறும் முறைகள் மற்றும் மாணவர்களுக்குப் போதிக்கும் செயல்முறைகள் எனப் பல முக்கிய உத்திகள் பகிரப்பட்டன.

துவான் ஹஜி நோர் ஹஷிம் பின் ஒத்மான், நெகிரி செம்பிலான் மாநிலக் கல்வித் துறையின் கற்றல் பிரிவின் துணை இயக்குநர் பங்கு பெற்ற ஆசிரியர்களுக்கு நற்சான்றிதல்களை வழங்கினார்.

#TamilSchoolmychoice

நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர், வீரப்பன் சுப்ரமணியம் இப்பட்டறைக்கு நிதியுதவி வழங்கியதோடு சுமார் 450 புத்தகங்களையும் 70 ‘Dadu Gergasi’ பகடைகளையும் நெகிரி செம்பிலானுள்ள 61 தமிழ்ப் பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்கினார்.