Home உலகம் அமெரிக்காவில் 3-வது புலம் பெயர் தமிழ்க் கல்வி மாநாடு

அமெரிக்காவில் 3-வது புலம் பெயர் தமிழ்க் கல்வி மாநாடு

365
0
SHARE
Ad
3-வது புலம் பெயர்ந்தோர் உலகத் தமிழ் கல்வி மாநாடு குறித்து 8 டிசம்பர் 2022-இல் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், சி.ம.இளந்தமிழ், டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன், முத்து நெடுமாறன்

கோலாலம்பூர்: உலகத் தமிழ்க் கல்விக்கழக ஏற்பாட்டில் மூன்றாவது புலம் பெயர் தமிழ்க் கல்வி மாநாடு (DTEC) அடுத்த ஆண்டு மே மாதத்தில் 26, 27, 28, 29-ஆம் தேதிகளில்  அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாராவில் நடைபெறவிருக்கிறது என்று மாநாட்டின் தலைவி வெற்றிசெல்வி ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழ்க் கல்விக்கழகம்

உலகத் தமிழ்க் கல்விக்கழகம் 1998 இல் நிறுவப்பட்டது. இது புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தமிழ் கற்பிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. எங்கள் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் அமைப்பாளர்களும் தமிழ் மொழியின் மீது ஆர்வமுள்ள தன்னார்வத் தொண்டர்களாவர். தமிழ் கற்றலில் இளைய தலைமுறையினரின் தேவைகளை நிறைவு செய்வதையும் நோக்கமாகக்கொண்டு செயல்படுகிறோம். மாணாக்கர் ஒரு கல்வியாண்டின் முடிவில் மொழித் தர மதிப்பீட்டின் ஓர் நிலையிலிருந்து அடுத்த நிலையினை அடைகின்றனர். நாங்கள் அனைவரும் உலகத் தமிழ்க் கல்விக்கழகத்தின் அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறோம். அந்தப் பெருமையுடன் எங்கள் 25ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

மாநாட்டின் நோக்கம்

புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தமிழ் கற்பிப்பதில் சிறந்து விளங்குவதற்கு, உலகத்தமிழறிஞர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதே இம்மாநாட்டின் நோக்கம் ஆகும்.

#TamilSchoolmychoice

தமிழ் முதன்மை மொழி அல்லாத மாணவர்களுக்குத் தமிழைக் கற்பிப்பதில் நாங்கள் அனைவரும் தனித்துவமான சவால்களையும் அனுபவங்களையும் எதிர்கொள்கிறோம்.

கருத்துப் பரிமாற்றத்தை எளிதாக்க, உலகெங்கிலும் உள்ள தமிழ்க் கல்வியாளர்களுடன் கைகோப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ் கற்பித்தல் திறன் மேம்பாடு- கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் (LSRW). மேற்காணும் திறன்களை மாணாக்கர் மேம்படுத்திக்கொள்வதற்கும் கற்பித்தலில் ஆசிரியர்கள் சிறந்து விளங்குவதற்கும் பல்வேறு முறைகளும் உத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றிற்கான புதிய முறைகளும் கண்டறியப்படுகின்றன. இம்முறைகளையும் தமிழ் கற்பித்தலில் அவற்றைப் பயன்படுத்துதற்கான சாத்தியக் கூறுகளையும் விவாதிக்கும் ஆய்வுக்கட்டுரைகளை வழங்குவதற்குத் தங்களை அழைக்கிறோம்.

மாநாட்டின் கருப்பொருள் / DTEC 2023 Theme:
Tamil teaching skills development- Listening, Speaking, Reading, Writing (LSRW)

தமிழ் கற்பித்தல்/ தமிழ் கற்றல் – திறன் மேம்பாடு (கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல்)

You are invited to present research papers exploring methods and possibilities of developing successful language teaching focusing on developing the above skills.

கட்டுரைத் தலைப்புகள் / Paper presentation Topics:
1. Concepts to improve foreign language teaching skills
மொழிகற்பித்தல் மேம்பாட்டு உத்திகள்
2. Methods for integrating LSRW
கேட்டல், பேசுதல், எழுதுதல், வாசித்தல் திறன்களை ஒருங்கிணைத்தல் முறைகள்
3. New approaches in language acquisition
மொழியைக் கையாள்வதற்கான புதிய அணுகுமுறைகள்
4. Techniques for activity-based learning
செயல்பாட்டு அடிப்படையில் கற்றல் உத்திகள்

மாநாடு குறித்து மேலும் விவரங்கள் வேண்டுவோர் பின்வரும் அகப்பக்கத்தில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

For more details, please visit: www.itadtec.org

மலேசிய நாட்டின் ஒருங்கிணைப்பாளர்களாக பேராசிரியர் முனைவர் என். எஸ். ராஜேந்திரன், திரு. முத்து நெடுமாறன் ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம். அவர்களது மின்னஞ்சல் முகவரிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

Malaysian Coordinators:

Professor Datuk Dr.N.S.Rajendran
rajensaratha@gmail.com
Muthu Nedumaran
muthu@murasu.com
C.M.Elanttamil
elanttamil@um.edu.my