Home கலை உலகம் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை

ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரை

473
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் : 2022-ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த படங்களுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைகள் இன்று அறிவிக்கப்பட்டன.

அதில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த அசல் (ஒரிஜினல்) பாடலுக்கான பிரிவில் நாட்டு நாட்டு பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் அனைத்துலக விருதளிப்பு விழாவில் சிறந்த பாடலுக்கான விருதைப் பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னர் ஏ.ஆர். ரஹ்மான் 2 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றார். ‘ஸ்லம் டோக் மில்லியனேர்’ என்ற படத்திற்காக சிறந்த இசையமைப்பு, சிறந்த பாடல் (ஜெய் ஹோ) ஆகிய பிரிவுகளில் அவர் ஆஸ்கார் விருதுகளை வென்றார்.