

சென்னை : மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமிழ் நாட்டுக்கு வருகை தந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.


சென்னை வந்தடைந்த சரவணனை அவரின் நண்பர்களும் ஆதரவாளர்களும் வரவேற்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சரவணன் மரியாதை நிமித்தம் சந்தித்து நலன் விசாரித்தார்.
அதன் பின்னர் மக்கள் முதல்வருடன் மனிதநேயத் திருநாள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அமைச்சர் சேகர் பாபுவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.


வணிகத் துறை ஆய்வாளர் கார்த்திக் எழுதிய பணப் புழக்கம் என்னும் நூலின் வெளியீட்டு விழாவிலும் சரவணன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பழனிமலை முருகன் கோவிலுக்கும் சரவணன் வருகை தந்தார்.