Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ‘சிங்கப்பெண்ணே’ தொடர் – கலைஞர்களுடன் சிறப்பு நேர்காணல்

ஆஸ்ட்ரோ : ‘சிங்கப்பெண்ணே’ தொடர் – கலைஞர்களுடன் சிறப்பு நேர்காணல்

591
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோவில் ஒளியேறி வரும் ‘சிங்கப்பெண்ணே ‘ தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு சிறப்பு நேர்காணல்

ஆர். பெரகாஷ் ராஜாராம், இயக்குநர்:

1. சிங்கப்பெண்ணே தொடரை இயக்கியதன் பின்னணியில் உள்ள உத்வேகம் என்ன?

பெரகாஷ்
#TamilSchoolmychoice

குடும்பம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலைச் சித்திரிக்கும் தொடர், சிங்கப்பெண்ணே. தொற்றுநோய் பரவல் காலக்கட்டத்தின் போது நான் அனுபவித்தப் போராட்டங்களையும் இந்தத் தொடர் நினைவுப்படுத்துகிறது, அதுவே எனது உத்வேகமாகும்.

2. சிங்கப்பெண்ணே தொடரை இயக்கிப் போது உங்களின் குறிப்பிடத்தக்க அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

நான் இந்தத் துறையில் முன்னோடியாக இருந்தாலும் பல கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. புதிய தலைமுறைக் கலைஞர்களுடன் பணிபுரிவது இதுவே முதல் முறை. மேலும் பெரும்பாலானக் கலைஞர்கள் மற்றும் குழுவினர் பெண்களாக இருந்ததால் சிங்கப் பெண்களுடன் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. எனக்கு வாய்ப்பளித்த ஏடிவி பிக்சர்ஸுக்கும், மறக்க முடியாத படப்பிடிப்பு அனுபவத்தை அளித்த சிங்கப்பெண்ணே குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நித்யா ஸ்ரீ & கவிதா சின்னையா, நடிகர்கள்:

1. சிங்கப்பெண்ணே தொடரில் நீங்கள் நடிக்கும் கதாப்பாத்திரத்தைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

நித்யாஸ்ரீ

நித்யா: நான் நடிக்கும் கதாப்பாத்திரம் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சத்யா. அவர் தனதுக் குடும்பத்தைப் பொறுத்தவரை மிகவும் உணர்ச்சிவசப்படுவதோடு அவர்களின் நலனுக்காக எதையும் செய்வார். அவர் ஓர் அன்பானச் சகோதரி மற்றும் மகள். இந்தக் கதாப்பாத்திரம் என்னுடைய நிஜ வாழ்க்கையில் ஏறக்குறைய 50% பொருந்தும்.

கவிதா: சத்யாவின் தங்கையான வித்யாவாக நடித்தேன். அவள் செய்யும் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கப் பாடுப்படும் ஒரு மாணவி. அவர் ஒரு ஃபுட்சல் குழுவின் தலைவரும் கூட. தனதுப் பெற்றோர்கள் தன்னை விடச் சகோதரியை மதிக்கிறார்கள் போன்றத் தவறுதலானப் புரிதல்களால் அவதிப்படுகிறாள். வித்யா மிகவும் வெளிப்படையான ஒரு நபர். அவளுடைய உணர்ச்சிகள் எப்போதும் தீவிரமானவை. அவள் கோபமாக இருக்கும்போது அதிகக் கோபப்படுகிறாள், அது சில நேரங்களில் அவளுடைய மிகப்பெரியப் பலவீனமாக மாறுகிறது. நிஜ வாழ்க்கையில் எனதுக் குணத்திற்கு எதிரானக் கதாப்பாத்திரம். நிஜ வாழ்க்கையில் எனக்கு கோபம் வந்தாலோ, வருத்தப்பட்டாலோ நான் அமைதியாக இருந்து விடுவேன்.

2. சிங்கப்பெண்ணே தொடரில் நீங்கள் நடித்த அனுபவம் எவ்வாறு இருந்தது?

நித்யா: பல உள்ளூர் திறமையாளர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு அனுபவங்கள் நன்றாக இருந்தது. இந்த வாய்ப்புக்கு நன்றி.

கவிதா

கவிதா: சிங்கப்பெண்ணே தொடரில் வித்யாவாக நடித்ததை மிகவும் இரசித்தேன். நிஜ வாழ்க்கையில் எனக்கு ஒரு சகோதரி இல்லை, அதனால் திரையில் ஒரு சகோதரி இருப்பது வேடிக்கையாக இருந்தது. என்னுடையச் சக கலைஞரான நித்யாவுடன் பணிபுரிந்தது மிகவும் எளிதாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. அவர் மிகவும் தொழில்முறையாக நடந்துக் கொண்டார். நான் என் அமைதியான மற்றும் இணக்கமான மூத்தச் சகோதரியைக் வித்தியாசமாகத் தோற்றமளிக்க என் நடை மற்றும் பேசும் பாணியை மாற்ற வேண்டியிருந்தது. பெரும்பாலான நடிகர்கள் மற்றும் குழுவினர் பெண்களாக இருந்த ஒரு தொடரில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. எனதுத் துணை இயக்குநர் ஷர்மினி, படப்பிடிப்பு முழுவதும் நான் நடிக்கும் கதாபாத்திரத்தை வழிநடத்தவும், வெளிக்கொணரவும் தவறியதில்லை. ஆக, இவை அனைத்தும் என்னுடைய சிங்கப்பெண்ணே படப்பிடிப்பு அனுபவத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியது. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ஏடிவி பிக்சர்ஸிலிருந்து ஆனந்த் சாருக்கும் ஆஸ்ட்ரோவுக்கும் நன்றி கூறிக் கொள்ள விரும்புகிறேன்.