Home இந்தியா ராகுல் காந்திக்கான 2 ஆண்டு சிறைத்தண்டனை – நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுப்பு

ராகுல் காந்திக்கான 2 ஆண்டு சிறைத்தண்டனை – நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுப்பு

390
0
SHARE
Ad

புதுடில்லி : காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மோடி சமூகத்தைப் பற்றி தரக் குறைவாகப் பேசினார் என்பதற்காக ராகுல் காந்தி மீது குற்றவியல் அவதூறு வழக்கை குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சூரத் நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.

அந்த வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பானது. அதனால் தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் அவர் இழந்தார்.

குஜராத் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப்பட்டதில் அந்த மேல்முறையீட்டை இன்று நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தது. இனி ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

2024-இல் இந்தியப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்குள் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால் அவர் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட முடியாது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவும் ஏற்படலாம். அல்லது ராகுல் மீதான அனுதாபத்தால் கூடுதல் வாக்குகளும் கிடைக்கலாம். கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் வெல்லலாம் என்றும் கணிக்கப்படுகிறது.