Home நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின் அமைச்சரவை மாற்றம்

சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின் அமைச்சரவை மாற்றம்

310
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆகஸ்ட் 12 சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்ததும் எப்படியும் அமைச்சரவை மாற்றம் வந்து விடும் என எழுந்த ஆரூடங்களை உறுதிப்படுத்தியிருக்கிறார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.

காலமான அமைச்சர் சாலாஹூடின் அயூப்புக்கு பதிலாக புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் தற்போதைக்கு பிரதமர் துறை அமைச்சர் அர்மிசான் முகமட் அலி உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச் செலவின அமைச்சின் பணிகளை மேற்கொண்டு வருவார் எனவும் அன்வார் அறிவித்துள்ளார்.

அநேகமாக சாலாஹூடினுக்கு பதிலாக அமானா கட்சியின் சார்பில் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலாஹூடின் மறைவினால் காலியான பூலாய் நாடாளுமன்றம், சிம்பாங் ஜெராம் சட்டமன்றம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

அந்த இடைத்தேர்தல்களும் முடிந்ததும் அமைச்சரவை மாற்றம் நிகழுமா அல்லது அதற்கு முன்பே அமைச்சரவை மாற்றங்கள் அறிவிக்கப்படுமா என்ற ஊகங்களும் எழுந்திருக்கின்றன.

அமைச்சரவை மாற்றத்தில் இந்திய அமைச்சர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆரூடங்கள் தெரிவிக்கின்றன. ஜசெக சார்பில் தற்போது அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மனித வள அமைச்சர் அந்தப் பதவியில் தொடர்வாரா என்ற கேள்வியும் உலா வருகிறது.

பிகேஆர் கட்சி சார்பில் இந்தியர் ஒருவர் முழு அமைச்சராக நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.