Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ஆகஸ்டு 2023 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : ஆகஸ்டு 2023 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

391
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோ ஆகஸ்டு 2023 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்:

*நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை

ஜூலை 31 முதல் தொடங்கிய புரோஜெக்ட் கர்மா

புரோஜெக்ட் கர்மா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: பர்வீன் நாயர், மார்ட்டின் ஆர். சந்திரன், ரூபினி கிருஷ்ணன், சாரா பாஸ்கின், & புஷ்பா நாராயணன்

#TamilSchoolmychoice

தான் அரிதான நோயால் பாதிக்கப்பட்டதால் அந்நோய்க்கான சிகிச்சைக்கு ஈடாக அந்நியர்களின் வாழ்க்கையில் நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார் அருள் தாஸ் எனும் வழக்கறிஞர். நோயைக் கண்டறிந்தவுடன் வாழ்க்கையின் மீது நம்பிக்கையை இழக்கும் அவர் திரு. கே என்ற மனித உருவிலான  ‘கர்மாவைச்’ சந்திக்கிறார். அருள் தாஸ் சேகரித்தக் ‘கெட்ட கர்மா’ மட்டுமே அவரின் நோய்க்கு முதன்மைக் காரணம் என்று தெரிவித்த திரு. கே, நோய்க்கானத் தீர்வையும் வழங்குகிறார். அருள் தாஸ் அந்நியர்களின் வாழ்க்கையில் நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களின் ‘கர்ம அளவுகளைச்’ சமநிலைப்படுத்த வேண்டும் என்பதே அவரின் நோய்க்கானத் தீர்வாகும். திரு. கே வழங்கியத் தீர்வை அருள் தாஸ் பின்பற்றுகிறாரா இல்லையா என்பதே கதையின் முக்கியச் சாரம்சமாகும்.

செவ்வாய், 1 ஆகஸ்டு முதல் தி ஜங்கள் புக்

தி ஜங்கள் புக் சீசன் 1 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), மாலை 5.30 மணி, திங்கள்-வெள்ளி

அகேலா மற்றும் அதன் ஓநாய் கூட்டத்தால் வளர்க்கப்பட்ட மனித இனமான மோக்லி, அவனதுச் சிறந்த நண்பர்களான தந்தை கரடி, பாலு மற்றும் விளையாட்டுத்தனமானச் சிறுத்தை, பகீரா ஆகியோரின் சாகசங்கள். வலிமைமிக்கப் புலி ஷேர் கான் போன்ற பல ஆபத்துகள் நிறைந்த காட்டில் அவர்கள் வாழ்கின்றனர். மேலும் ஆபத்தில் இருக்கும் விலங்குகளுக்கு உதவுவதையோ அல்லது பிறப் பிரச்சனைகளைத் தீர்ப்பதையோ தவிர்க்க முடியாததால் ஆர்வமுள்ள மோக்லி அடிக்கடிச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறான்.

வெள்ளி, 4 ஆகஸ்டு முதல் எங்க வீட்டு செஃப்

எங்க வீட்டு செஃப் (புதிய அத்தியாயம் – 23)
ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 7.30 மணி, வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

உள்ளூர் திறமையாளர்கள் தங்களது தாய், மாமியார், சகோதரி மற்றும் அவர்களின் இதயங்களுக்கு நெருக்கமானப் பிற நபர்களுடன் இடம்பெறுவர். தங்களது தனித்துவமான சமையல் பாணியைப் பயன்படுத்திச் சுவையான உணவுகளைச் சமைப்பர். இரசிகர்கள் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சமையல் குறிப்புகளையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கலாம். விருந்தினர்கள் ‘பெர்ன்லீஃப் பாலைப்’ பயன்படுத்தி பாரம்பரிய இந்திய உணவுகளைச் சமைப்பர். அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் பிடித்த பாரம்பரிய இந்திய உணவு வகைகளையும் சமைப்பர். உள்ளூர் இனிப்புகளையும் தயார் செய்வர். இந்த வார அத்தியாத்தில் உள்ளூர் திறமையாளர், விக்கி மற்றும் அவரது தாய் இடம்பெறுவார்கள்.

வெள்ளி, 11 ஆகஸ்டு

எங்க வீட்டு செஃப் (புதிய அத்தியாயம் – 24)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 7.30 மணி, வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

உள்ளூர் திறமையாளர்கள் தங்களது தாய், மாமியார், சகோதரி மற்றும் அவர்களின் இதயங்களுக்கு நெருக்கமான பிற நபர்களுடன் இடம்பெறுவர். தங்களதுத் தனித்துவமானச் சமையல் பாணியைப் பயன்படுத்திச் சுவையான உணவுகளைச் சமைப்பர். இரசிகர்கள் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமானச் சமையல் குறிப்புகளையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கலாம். விருந்தினர்கள் ‘பெர்ன்லீஃப் பாலைப்’ பயன்படுத்திப் பாரம்பரிய இந்திய உணவுகளைச் சமைப்பர். அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் பிடித்தப் பாரம்பரிய இந்திய உணவு வகைகளையும் சமைப்பர். உள்ளூர் இனிப்புகளையும் தயார் செய்வர். இந்த வார அத்தியாயத்தில் உள்ளூர் திறமையாளர்களான, மகேன் மற்றும் கோமதி இடம் பெறுவார்கள்.

சனி, 12 ஆகஸ்டு

மேஜர் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), இரவு 9 மணி

நடிகர்கள்: அதிவி சேஷ், பிரகாஷ் ராஜ், & சோபிதா துலிபாலா

2008 மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்ட மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படம். ஒரு பயங்கரவாதக் குழுவால் தாக்கப்பட்டத் தாஜ் ஹோட்டலில் வசிப்பவர்களைக் காப்பாற்றும் பணிக்குழுவில் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் சேரும் போது அவர் மிகப்பெரியச் சவால்களை எதிர்கொள்கிறார்.

மேரா முக்காடார் (Mera Muqaddar) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), மதியம் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அம்ரிதா ராஜ் & பிரேம் சோப்ரா

சூரஜ் ருச்சியைத் திருமணம் செய்துக் கொள்வதற்காகச் சாந்தியைக் கைவிடும் வரை சூரஜ் மற்றும் சாந்தி அழகான வாழ்க்கையை நடத்துகிறார்கள். சாந்தி மற்றும் ருச்சி இருவருக்கும் ஆண் குழந்தைகள் பிறக்கிறார்கள். சகோதரர்கள் என்பதை அறியாத அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.