Home நாடு 6 மாநில சட்டமன்றத் தேர்தல் : 96% வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்தனர்

6 மாநில சட்டமன்றத் தேர்தல் : 96% வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்தனர்

298
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெற்ற ஆறு மாநிலத் தேர்தல்களின் முன்கூட்டிய வாக்களிப்பு நடைபெற்றது. காவல் துறையினர், இராணுவத்தினர், அவர்களின் குடும்பத்தினர், தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்ட  மொத்தம் 72,554 பேர் முன்கூட்டியே வாக்காளர்களாக தங்கள் கடமைகளை நிறைவேற்றினர்.

கெடாவில் 96.02% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் கூறினார்; கிளந்தான் (93.90%); திரெங்கானு (95.91%); பினாங்கு (95.01%); சிலாங்கூர் (95.87%) மற்றும் நெகிரி செம்பிலான் (94.05%) என வாக்குகள் மற்ற மாநிலங்களில் பதிவாகின.

கோலதிரெங்கானு நாடாளுமன்ற இடைத்தேர்தலில், மொத்தம் 95.47% பேர் முன்கூட்டியே வாக்களித்தனர்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, திரெங்கானு, கிளந்தான் ஆகிய மாநிலத் தேர்தல்களுக்கும், கோலதிரெங்கானு இடைத்தேர்தலுக்கும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வாக்களிப்பு தேதியாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.