Home உலகம் ஓட்டுநர் மயங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தில் அலறிய மக்கள்

ஓட்டுநர் மயங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தில் அலறிய மக்கள்

474
0
SHARE
Ad

passenger_presses_002சுவிட்சர்லாந்து, ஏப்ரல் 25-சுவிட்சர்லாந்திலுள்ள பேசேல் நகரில்  நேற்று மதியம் 1.30 மணி அளவில் ஒரு பேருந்து சாலையில் சென்று கொண்டிருக்கும்பொழுது அதன் ஓட்டுநர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் பேருந்து சாலையில் வளைந்து வளைந்து நிலை தடுமாறி ஓடியதில் அதிலிருந்த பயணிகள் உதவி கேட்டு அலறியுள்ளனர்.

இதில் ஒரு பெண் பேருந்தின் கதவு மீது மோதி மயங்கி விழுந்துள்ளார். அப்பேருந்தினுள் இருந்த ஒரு பிரெஞ்சுக்காரர் மட்டும் நிலைமையைப் புரிந்து கொண்டு ஓட்டுநர் இடத்திற்கு விரைந்து சென்று பிரேக்கை மிதித்து பேருந்தை நிறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

வேறோரு பயணி பேருந்தின் கதவை உடைத்து வெளியே சென்று பயணிகள் பத்திரமாகக் கீழே இறங்க உதவினார். கதவில் மோதி காயம்பட்ட பெண்ணும், ஓட்டுநரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.