Home நாடு “மலேசியர்களை மேலும் பிரிப்பதை நிறுத்துங்கள்” – செனட்டர் லிங்கேஸ்வரன் வேண்டுகோள்

“மலேசியர்களை மேலும் பிரிப்பதை நிறுத்துங்கள்” – செனட்டர் லிங்கேஸ்வரன் வேண்டுகோள்

521
0
SHARE
Ad
செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன்

செனட்டர் அ.லிங்கேஸ்வரன்
பத்திரிகை அறிக்கை

“மலேசியர்களை மேலும் பிரிப்பதை நிறுத்துங்கள்”

இனம் மற்றும் மதப் பேச்சுக்களைக் கண்ட இந்த மாநிலத் தேர்தல்கள், மலேசிய வரலாற்றில் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த தேர்தலாகக் கருதப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானுடன் கெடா, கிளந்தான், திராங்கானு மற்றும் பினாங்கில் மாநில அரசாங்கங்கள் விரைவில் அமைக்கப்படவுள்ளன.

முரண்பாடாக, துணை முதலமைச்சர் II பதவி, இனத்திற்குள் குழப்பம் ஏற்பட்டதைக் கண்டு பினாங்கில் இனம் மற்றும் மதச் சொல்லாட்சிகள் மற்றொரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

#TamilSchoolmychoice

கோட்பாட்டளவில் இந்திய சமூகத்தில் இருந்து மலேசியர்களின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்த, 3 தவணை சட்டமன்ற உறுப்பினர், மாண்புமிகு ஜக்தீப் சிங் தியோ, மாநில ஆட்சி குழு உறுப்பினராகவும், துணை முதலமைச்சர் II ஆகவும் பதவியேற்றார். இதனைத் தொட்டு, முன்னாள் துணை முதலமைச்சர் II பேராசிரியர் டாக்டர் ராமசாமி இனவாதப் பேச்சுகளை வெளியிட்டுள்ளார்.

ஹிண்ட்ராப் பேரணியைத் தொடர்ந்து 2008 இல் உருவாக்கப்பட்ட துணை முதலமைச்சர் II பதவியானது இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்களுக்கு ஒதுக்கப்பட்டது என்று பேராசிரியர் ராமசாமி கூறினார்.

நிச்சயமாக இங்கே ஒரு திருத்தம் செய்யப்பட வேண்டும். வரலாற்று ரீதியாக 2008 முதல், துணை முதலமைச்சர் II பதவியானது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியருக்கு ஒதுக்கப்பட்டது.

பேராசிரியர் டாக்டர் ராமசாமி, ஒரு தமிழர், 3 தவணை பதவி வகித்து, முதல் மற்றும் இதுவரை ஒரே மலேசிய இந்திய துணை முதலமைச்சர் II என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதற்கு சரியான விளக்கம் எனபது, இது மலேசிய இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பதவி, தமிழ் இனத்தைச் சேர்ந்த மலேசிய இந்தியர்களுக்கு மட்டும் அல்ல.எனவே, இந்த சூழலில், பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய இந்தியரான மாண்புமிகு ஜக்தீப், பேராசிரியர் டாக்டர் ராமசாமி ஒரு மலேசிய இந்தியராக இருப்பதைப் போல, இவரும் மலேசிய இந்தியர் ஆவார்.

நான் அறிந்து கொண்டது, இந்தியா மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் இரண்டும் ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டத்தின் பகுதிகள் அல்ல, இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடிய இந்தியாவின் மாநிலங்கள் ஆகும்.தமிழ், பஞ்சாபி, மலையாளி, குஜராத்தி, தெலுங்கு, மராத்தி, அஸ்ஸாமி, பீஹாரி அல்லது காஷ்மீரி என எல்லோரும் இந்தியர்களே.

இன்னும் சொன்னால், இந்தியாவின் தொப்புள் கொடி உறவுக் கொண்டவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியினர். எனவே மாண்புமிகு ஜகதீப், பேராசிரியர் டாக்டர் ராமசாமியைப் போல ஓர் இந்தியர்.மலேசியாவில் உள்ள இந்தியர்களில் தமிழ் சமூகம் பெரும்பான்மையாக உள்ளது உண்மைதான், ஆனால் பல மலையாளிகள், தெலுங்கர்கள், பஞ்சாபிகள் மற்றும் குஜராத்திகளும் இங்கு உள்ளனர்.

முதலாவதாக, நம் முன்னோர்கள் எங்கிருந்து வந்தாலும் நாம் அனைவரும் மலேசியர்கள். இந்தோனேசியா, சீனா, இந்தியா, பெர்சியா, பிலிப்பைன்ஸ், வங்காளதேசி அரேபியர்கள் ஆகியோர் போல.

இரண்டாவதாக, சிறுபான்மையினரான இந்திய வம்சாவளி மலேசியர்களுக்கு, இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாம் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

எனவே இந்த பிரிவினைவாத போக்கை நிறுத்துங்கள்.
இது மிகவும் குறுகிய சிந்தனை, இது மிகவும் ஆழமற்றது. நமக்குள் நாமே உருவாக்கிக் கொள்ளும் இந்த குறுகிய பார்வையிலிருந்து விலகிச் செல்வோம்.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒவ்வொரு மலேசிய இந்தியருக்கும் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், பூமிபுத்திரர்கள், பூமிபுத்திரர்கள் அல்லாதவர்கள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் வயதான மலேசியர்கள் வாக்களித்தனர்.

நாம் தொடர்ந்து பிரிந்து, இனப் பற்று பார்வையில் இருந்தால், ஒற்றுமை மற்றும் நம்பிக்கை பற்றி பேச நமக்கு எந்த உரிமையும் இல்லை.

நம்மை மேலும் பிரிப்பதை நிறுத்துங்கள்!

நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்.

பினாங்கு மற்றும் மலேசியாவிற்கு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.

இந்த மாதம் நமது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, நான் அனைவரையும் கேட்டு கொள்வது, ஜ.செ.க போன்ற பல இன மற்றும் பல மதக் கட்சியின் தலைவர்கள், அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் கொண்டர்களாக இருக்க வேண்டும்.

தைரியமாகவும் மற்றும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அனைவருக்கும் உதவுங்கள்.

நாம் அனைவரும் மலேசியா மைந்தர்கள்.

இந்த நேரத்தில் ஓர் உறுதிமொழியை வழங்க விரும்புகிறேன். டத்தோஸ்ரீ சுந்தரராஜூ, மாண்புமிகு ராயர், மாண்புமிகு குமரேசன், மாண்புமிகு குமரன் ஆகியோரோடு நானும் – நாங்கள் அனைவரும் – இந்திய சமுதாயத்தின் நலனுக்காக மாநில, மத்திய அரசாங்கங்கள் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையையும் முன்னெடுப்போம் என உறுதி கூறுகிறேன்.

ஒன்றுபட்டால் நாம் உயர்வோம்! பிளவுபட்டால் நாம் வீழ்வோம்!

இவ்வண்ணம்,

மாண்புமிகு செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன்