Home கலை உலகம் ‘உலகம் விருதுகள் 2023’- வாக்களிக்க அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகின்றனர்

‘உலகம் விருதுகள் 2023’- வாக்களிக்க அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகின்றனர்

460
0
SHARE
Ad

உலகம் விருதுகள் 2023’-ல் வாக்களிக்க அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகின்றனர்

ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தின் மூலம் செப்டம்பர் 3 வரை வாக்களியுங்கள்

கோலாலம்பூர் –  தொலைக்காட்சி, வானொலி, மின்னியல் மற்றும் திரையரங்கு ஆகியவற்றில் சிறந்த உள்ளூர் திறமைகள் மற்றும் தயாரிப்புகளைக் கொண்டாடும் ‘உலகம் விருதுகள் 2023’ எனும் உள்ளூர் விருது நிகழ்ச்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகிறார்கள். ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று முதல் செப்டம்பர் 3, 2023 வரை நடைபெறும். அக்டோபர் 4, 2023 ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக விருது நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்படும்.

‘இந்த ஆண்டின் பிரபலமான மலேசியத் தமிழ் திரைப்படம்’, ‘பிரபலமான மின்னியல் உள்ளடக்கத் தயாரிப்பாளர்’ மற்றும் ‘பிரபலமான மின்னியல் காணொலி உள்ளடக்கம்’ ஆகியவை உட்பட 36-இல் 14 புதிய விருதுப் பிரிவுகளை ‘உலகம் விருதுகள் 2023’ உள்ளடக்கியுள்ளது. ‘பிரபல விருதுகள்’ பிரிவு உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து 286 விண்ணப்பங்களைப் பெற்றது. அனைத்து விருது வகைகளும் கீழ்வருமாறு:

முக்கியப் பிரிவுகள்
பிரபல விருதுகள் சிறந்த விருதுகள் பிரத்தியேக விருதுகள்
பிரபலமான முன்னணி ஆண் கதாப்பாத்திரம் (டெலிமூவி/தொடர்) சிறந்த ஸ்கிரிப்ட் (டெலிமூவி) வாழ்நாள் சாதனையாளர்
பிரபலமான முன்னணி பெண் கதாப்பாத்திரம் (டெலிமூவி/தொடர்) சிறந்த இயக்குநர் (டெலிமூவி) உலகம் ஒளிரும் நட்சத்திரம்
பிரபலமானத் துணைக் கதாப்பாத்திர நடிகர்/நடிகை (டெலிமூவி/தொடர்) சிறந்த ஸ்கிரிப்ட் (தொடர்) ஆஸ்ட்ரோ உலகம் கதாநாயகர் விருது
பிரபலமான எதிர்மறைக் கதாப்பாத்திர நடிகர்/நடிகை (டெலிமூவி/தொடர்) சிறந்த இயக்குநர் (தொடர்) ஆண்டின் தொடர்
பிரபலமான நகைச்சுவைப் படைப்பு (டெலிமூவி/தொடர்) சிறந்த ஒளிப்பதிவு (டெலிமூவி/தொடர்)  
ஆண்டின் பிரபலமான டெலிமூவி சிறந்த எடிட்டிங் (டெலிமூவி/தொடர்)  
ஆண்டின் பிரபலமானத் தொடர் சிறந்த விளம்பரம்/டிரெய்லர் (டெலிமூவி/தொடர்)  
ஆண்டின் பிரபலமானத் தொலைக்காட்சி நிகழ்ச்சி சிறந்த காட்சி அல்லது சிறப்பு இ.எப்.எக்ஸ் (டெலிமூவி/தொடர்)  
பிரபலமானத் தொலைக்காட்சித் தொகுப்பாளர் சிறந்த ஒப்பனை (டெலிமூவி/தொடர்)  
செய்தி அல்லது நடப்பு நிகழ்வுகளின் பிரபலமானப் படைப்பாளர்/தொகுப்பாளர் சிறந்த ஆடை அலங்காரம் (டெலிமூவி/தொடர்)  
ஆண்டின் பிரபலமான அசல் பாடல்  (OST) (டெலிமூவி/ தொடர்/ தொலைக்காட்சி நிகழ்ச்சி) சிறந்தத் தயாரிப்பு வடிவமைப்பு (டெலிமூவி/தொடர்)  
ஆண்டின் பிரபலமான மலேசியத் தமிழ் பாடல் (ராகா) சிறந்த ஒலி வடிவமைப்பு (டெலிமூவி/தொடர்)  
ஆண்டின் பிரபலமான இசையமைப்பாளர் (ராகா) புனைகதை அல்லாத நிகழ்ச்சியின் சிறந்த இயக்குநர் (தொலைக்காட்சி நிகழ்ச்சி)  
ஆண்டின் பிரபலமான அறிவிப்பாளர் (ராகா) ஆண்டின் சிறந்தப் பாடலாசிரியர் (ராகா)  
ஆண்டின் பிரபலமானப் பாடகர் (ராகா)    
ஆண்டின் பிரபலமான மலேசியத் தமிழ் திரைப்படம்    
பிரபலமான மின்னியல் உள்ளடக்கத் தயாரிப்பாளர்    
பிரபலமான மின்னியல் காணொளி உள்ளடக்கம்    

 

#TamilSchoolmychoice

மேல் விபரங்களுக்கு, ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.