Home Photo News மஇகா தலைமையகம் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா (படக் காட்சிகள்)

மஇகா தலைமையகம் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா (படக் காட்சிகள்)

521
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகா தலைமையகத்தின் புதிய தலைமையகக் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று திங்கட்கிழமை ஆகஸ்ட் 21, காலை 10.00 மணி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றது.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரும் அடிக்கல் நாட்டு விழா தொடர்பில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர்.

இந்து முறைப்படியான பூஜையைத் தொடர்ந்து இஸ்லாமிய முறைப்படி துவா ஓதும் சடங்கை இந்திய முஸ்லீம் சமூகத்தினர் சார்பில் கம்பம் பீர் முகமது பார்கவி நிகழ்த்தினார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து கிறிஸ்துவ முறைப்படியான பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மஇகாவினரும், பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மஇகாவின் புதிய கட்டடம்

ம.இ.காவின் இப்புதிய இரண்டு கட்டிட அமைப்பில், ஒரு கட்டிடம் 35 அடுக்குமாடிகள் கொண்டு அவற்றில் அலுவலகமும் தங்குவிடுதியும் அமைக்கப்பட உள்ளது. அதனை அடுத்து 45 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு அமைக்கப்பட உள்ளது. அக்கட்டிடத்தில் சுமார் 3,500 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, 8 மாடி அளவிலான வாகனம் நிறுத்துமிடமும் தரைத் தளத்தில் வணிக கடைகளும் அமைக்கப்பட உள்ளது.

இன்று நடைபெற்ற புதிய மஇகா தலைமையகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா படக் காட்சிகளை இங்கே காணலாம்: