Home கலை உலகம் OR1 FM உடன் WONDA Kopi Tarik எனும் மலேசியாவின் அசல் வானொலி நிலையம் அறிமுகம்

OR1 FM உடன் WONDA Kopi Tarik எனும் மலேசியாவின் அசல் வானொலி நிலையம் அறிமுகம்

437
0
SHARE
Ad

OR1 FM உடன் WONDA Kopi Tarik எனும் மலேசியாவின் அசல் வானொலி நிலையத்தை இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு WONDA Kopi Tarik மற்றும் ஆஸ்ட்ரோ வானொலி அறிமுகப்படுத்துகின்றன

• 4 மொழிகளில் 17 வானொலி நிலையங்கள்
• ஒரே உள்ளடக்கத்தை ஒரே நேரத்தில் 18 மணிநேரத்திற்கு முதல் முறையாக ஒலிபரப்புகின்றனர்
• SYOK நேரலைப் போட்டிகள் மூலம் 30,000-ரிங்கிட்டில் ஒரு பங்கை ரொக்கமாக வெல்லுங்கள்

கோலாலம்பூர் – மலேசியாவின் தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஆஸ்ட்ரோ வானொலி மற்றும் எட்டிகா வழங்கும் OR1 FM உடன் Wonda Kopi Tarik, மலேசியாவின் அசல் ஆனச் சுவை-இன் ஒலிபரப்பை நேயர்கள் கேட்டு மகிழலாம்.

ஆகஸ்டு 30, காலை 6 மணி முதல் ஆகஸ்டு 31, 2023 நள்ளிரவு 12 வரை வானொலி மற்றும் SYOK செயலியில் மிகவும் அசல் ஆன மலேசிய வானொலி அனுபவத்தை உருவாக்க OR1 FM உடன் Wonda Kopi Tarik முதன்முறையாக மலாய், ஆங்கிலம், சீனம் மற்றும் தமிழ் ஆகிய 4 மொழிகளில் 17 வானொலி நிலையங்களை ஒன்றிணைக்கும்.

#TamilSchoolmychoice

OR1 FM உடன் Wonda Kopi Tarik-இல் நேயர்கள் தங்களுக்குப் பிடித்தமானச் சிறப்பாகத் தொகுக்கப்பட்ட மலேசியப் பாடல்களைக் கேட்டு இரசிக்கலாம், ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம் மற்றும் மலேசியர்களின் தனித்துவத்தையும் நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்தும் அற்புதமானப் பல மொழி விவாதங்களை அனுபவிக்கலாம்.

இந்த நிகழ்வின் போது, Wonda Kopi Tarik, மலேசியாவின் அசல் ஆனச் சுவைப் போலவே, அசல் மலேசியக் கலாச்சாரத்தின் பன்மொழி மற்றும் பல்கலாச்சாரப் பன்முகத்தன்மையைக் குறிக்கும் தனித்துவமான ஒலிபரப்பை நேயர்கள் கேட்டு மகிழலாம். அனைத்து வானொலி பிராண்டுகளின் சமூக ஊடகங்களில் OR1 FM உடன் Wonda Kopi Tarik-இன் புகைப்படம் மற்றும் காணொளிப் புதுப்பிப்புகளை நேயர்கள் கண்டு இரசிக்கலாம். மேலும் தங்களுக்குப் பிடித்த 60-க்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்கள் பாரம்பரிய உடை அணிந்திருப்பதையும் கண்டு மகிழலாம்.

அது மட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் SYOK செயலியில் போட்டிகளின் மூலம் 30,000 ரிங்கிட் ரொக்கத்தில் ஒரு பங்கை வீட்டிற்குத் தட்டிச் செல்லும் வாய்ப்பையையும் நேயர்கள் பெறுவர். பங்கேற்க, இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:

• முதலில், SYOK செயலியைத் தொடங்கவும் அல்லது bm.syok.my-ஐப் வலம் வரவும்

• பங்கேற்பாளர்கள் போட்டியில் சேர உள்நுழைய வேண்டும் அல்லது பதிவுச் செய்ய வேண்டும்.

• ‘காணொலி’ தாவலைக் கிளிக் செய்து, SYOK நேரலை வாயிலாகப் போட்டியில் கலந்துக் கொண்டு கேள்விகளுக்கு சரியாகப் பதிலளிக்கவும்.

மேல் விபரங்களுக்கு, அனைத்து ஆஸ்ட்ரோ வானொலி சமூக ஊடக பக்கங்களையும் பின்தொடரவும்.

இதைத் தவிர்த்து, இப்போது முதல் செப்டம்பர் 8 வரை, மலேசியர்கள் ‘ராகாவின் மர்ம மனிதன்!’ என்ற வானொலிப் போட்டியில் பங்கேற்று, ‘மர்ம மனிதன்’ ஒருவனைக் கண்டுபிடித்து, ரொக்கமாக 10,000-ரிங்கிட்டில் ஒரு பங்கை வீட்டிற்குத் தட்டிச் செல்லும் வாய்ப்பைப் பெறலாம்.

பங்கேற்கவும் மர்ம மனிதன் இருக்கும் இடத்தைப் பற்றியத் துப்புகளைப் பெறவும் இரசிகர்கள் வானொலி அல்லது SYOK செயலியில் ராகாவைக் கேட்க வேண்டும். பங்கேற்பாளர்கள் துப்புகளின்படி ‘மர்ம மனிதன்’ இருக்கும் இடத்திற்குச் சென்று அவனைக் கண்டுப்பிடிக்க வேண்டும். பின் அவனிடம் ‘நீங்கள் தான் ராகாவின் மர்ம மனிதனா?’ என்றக் கேள்வியைக் கேட்க வேண்டும். |

நேயர் ஒருவர் ‘மர்ம மனிதனைச்’ சரியாக அடையாளம் கண்டுவிட்டால், வெற்றியாளரை அறிவிப்பதற்காக அங்குள்ள குழுவினர் ராகாவை அழைப்பார்கள். வெற்றிப் பெற்றப் பங்கேற்பாளர்கள் குறைந்தப்பட்சம் ரிம1000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர். வெற்றியாளர் இல்லாவிட்டால் பரிசுத் தொகை அடுத்தச் சுற்றில் பனிப்பந்தாகும். மேல் விபரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.