Home நாடு அகமட் தெரிருடின் புதிய சட்டத்துறை தலைவராக நியமனம்

அகமட் தெரிருடின் புதிய சட்டத்துறை தலைவராக நியமனம்

339
0
SHARE
Ad
அகமட் தெரிருடின்

புத்ரா ஜெயா : நாட்டின் புதிய சட்டத்துறை தலைவராக (அட்டர்னி ஜெனரல்) நடப்பு தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல் – Solicitor-general) அகமட் தெரிருடின் நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் அவரின் பதவிக் காலம் தொடங்குகிறது.

அறிக்கை ஒன்றின் இந்த நியமனத்தை வெளியிட்ட அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமட் சுக்கி அலி, மாமன்னரும் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நடப்பு சட்டத்துறை தலைவரான இட்ருஸ் ஹாருணின் பதவிக் காலம் செப்டம்பர் 5-ஆம் தேதியோடு முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து 54 வயதான புதிய சட்டத்துறைத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சட்டத்துறை தலைவர் கனி பட்டேலுக்கு பிறகு அரசாங்க சேவையிலிருந்து நேரடியாக சட்டத் துறை தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் அகமட் தெரிருடின். 2002-ஆம் ஆண்டில் சட்டத் துறை தலைவராக அகமட் தெரிருடின்.

2015 வரை சட்டத்துறைத் தலைவராக நீடித்த கனி பட்டேலுக்குப் பின்னர் முகமட் அபாண்டி அலி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

2018-இல் துன் மகாதீர் தலைமையில் பக்காத்தான் ஹாரப்பான் அரசாங்கம் ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து அபாண்டி அலிக்கு பதிலாக டோமி தோமஸ் சட்டத் துறை தலைவரானார்.