உங்களைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்
டேனேஸ் குமார்: ஒரு கலைஞராக, எழுத்தாளராக மற்றும் தயாரிப்பாளராக 22 வருடங்களாக இக்கலைத்துறையில் எனதுப் பயணத்தைத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்.
மேலும், ஆஸ்ட்ரோவின் உள்ளூர் தொடர்களுக்கு மத்தியில் அதிக மதிப்பீட்டைப் பெற்ற உள்ளூர் தமிழ் குடும்பத் தொடரான ‘தமிழ்லட்சுமி’-இன் வெற்றிக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். இந்தச் சாதனைகள் என்னை மேலும் பணிவானவராக ஆக்கியதோடு கதைக் கூறல் ஆர்வத்தை வலுப்படுத்தியது.
பேமிலி பியூட் மலேசியா தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் எவ்வாறு இருந்தது?
டேனேஸ் குமார்: பேமிலி பியூட் மலேசியா தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு மகிழ்ச்சியான மற்றும் மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. இந்த நிகழ்ச்சி எனக்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல் நம் சமூகத்தில் இருக்கும் பல்வேறு எண்ணங்களையும் யோசனைகளையும் பாராட்டவும் ஏற்கவும் வழிவகுத்தது. எனது அனுபவத்தை இன்னும் சுவாரஸ்யமாக மாற்றிய மற்றப் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்துக் கொண்ட அற்புதமானத் தருணங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.
தொழில்துறையில் உள்ள நண்பர்களுடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் திரு ராம் நிகழ்ச்சியில் அதிக நகைச்சுவைகளை இணைத்துக் கொண்டதால் பங்கேற்பு மேலும் சிறப்பாக இருந்தது.
உங்கள் இரசிகர்களுக்காக ஒரு செய்தியைப் பகிரவும்
டேனேஸ் குமார்: எனது அன்பான இரசிகர்களான உங்கள் அனைவருக்கும், உங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கும் அன்புக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் ஊக்கமும் பாராட்டும் எனது பயணத்தில் மிகவும் உறுதுணையாக இருந்ததோடு வெற்றிகளுக்கும் வித்திட்டது. இந்த அழகானப் பயணத்தை நாம் இணைந்துத் தொடருவதால், சிறிய விஷயங்களுக்கு மகிழ்ச்சி அடைவோம், நம்மைச் சுற்றியுள்ள ஆசீர்வாதங்களைப் பொக்கிஷமாகக் கருதுவோம். உங்களின் நேர்மறையும் மகிழ்ச்சியும் உங்களின் இதயங்களை எதிரொலிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்க என்னைத் தூண்டுகிறது. எனதுப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றி, மேலும் மகிழ்ச்சியையும் நன்றியுணர்வையும் இணைந்தேப் பரப்புவோம்.
ஆனந்தா: பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவாக இருக்கும் எனது இரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். என்னையும் உதயாவையும் திங்கள் முதல் வெள்ளி வரை ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல், இரவு 9 மணிக்கு ஒளியேறும் ‘சரவெடி நைட்’, நிகழ்ச்சியில் காணத் தவறாதீர்கள்.அனைவரையும் நேசிக்கிறேன்!
அஹிலா: பேமிலி பியூட் மலேசியா தமிழ் நிகழ்ச்சியை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இணைந்து கண்டு மகிழுங்கள். நீங்கள் நிச்சயமாக அதில் ஈர்க்கப்படுவீர்கள். மகிழ்ச்சியாகவும் நேர்மறை எண்ணத்தோடும் இருங்கள். அன்பைப் பரப்புவோம்.