Home கலை உலகம் ‘ராகாவில் நான் அவன் இல்லை’ – வானொலிப் போட்டி – ரொக்கப் பரிசுகளை வெல்லுங்கள்

‘ராகாவில் நான் அவன் இல்லை’ – வானொலிப் போட்டி – ரொக்கப் பரிசுகளை வெல்லுங்கள்

485
0
SHARE
Ad

‘ராகாவில் நான் அவன் இல்லை’ வானொலிப் போட்டியில் பங்கேற்று ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்

‘ராகாவில் நான் அவன் இல்லை’ போட்டியைப் பற்றிய சில விவரங்கள்

• ராகா இரசிகர்கள் இப்போது முதல் அக்டோபர் 20 வரை ‘ராகாவில் நான் அவன் இல்லை’ எனும் வானொலிப் போட்டியில் பங்கேற்று 300 ரிங்கிட் வரை ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.

• வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் குறிப்பிட்ட அழைப்புக்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், 03-95430993 எனும் தொலைபேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்கும் இரசிகர்கள் முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.

#TamilSchoolmychoice

• ஒரு பிரபலத்தைப் பற்றிய ஒரு துப்பை அறிவிப்பாளர் பகிர்வார். ரிம300 ரொக்கப் பணத்தை வெல்லப் பங்கேற்பாளர் 5 வினாடிகளுக்குள் அந்தப் பிரபலத்தைச் சரியாக யூகித்துக் கூற வேண்டும்.

• பதில் தவறாக இருந்தால், அதே பிரபலத்தைப் பற்றிய இரண்டாவது தகவல், அடுத்தப் பங்கேற்பாளருக்கு அறிவிப்பாளரால் வழங்கப்படும். 200 ரிங்கிட் ரொக்கப் பணத்தை வெல்ல அந்தப் பங்கேற்பாளர் 5 வினாடிகளுக்குள் அதே பிரபலத்தைச் சரியாக யூகித்துக் கூற வேண்டும்.

• பதில் மீண்டும் தவறாக இருந்தால், அதே பிரபலத்தைப் பற்றிய மூன்றாவது தகவல், அடுத்தப் பங்கேற்பாளருக்கு அறிவிப்பாளரால் வழங்கப்படும். 100 ரிங்கிட் ரொக்கப் பணத்தை வெல்ல அந்தப் பங்கேற்பாளர் 5 வினாடிகளுக்குள் அதே பிரபலத்தைச் சரியாக யூகித்துக் கூற வேண்டும்.

பின்தொடருக: