Home இந்தியா திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனைகள்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனைகள்

401
0
SHARE
Ad
ஜெகத்ரட்சகன்

சென்னை: திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் வீடு, தங்கு விடுதி (ஹோட்டல்) உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனைகள் இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்றது.

ஜெகத்ரட்சகன் முன்னாள் மத்திய அமைச்சருமாவார். அவர் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பூந்தமல்லியில் உள்ள ஒரு கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.  ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்ள்ச் சென்றபோது அந்த வீடு பூட்டியிருந்ததால், பூட்டை உடைத்து உள்ளே சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 89.19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது.

இதற்கிடையில் வருமான வரித் துறையின் இந்த சோதனைகள் ஆளும் பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார்.