Home Photo News நரேந்திர மோடி தீபாவளியை இந்திய எல்லை இராணுவத்தினருடன் கொண்டாடினார்

நரேந்திர மோடி தீபாவளியை இந்திய எல்லை இராணுவத்தினருடன் கொண்டாடினார்

509
0
SHARE
Ad

புதுடில்லி : இந்தியா முழுவதும் தீபாவளி கோலாகலமாகக் கொண்டாடப்படும் நாளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் இந்தியாவின் ஏதோ ஓர் எல்லைப் பகுதியில் குடும்பத்தினரைப் பிரிந்திருக்கும் இந்திய இராணுவத்தினரைத் தேடிச் செல்வார். அவர்களுடன் தீபாவளியை பலகாரங்கள் வழங்கி கொண்டாடி மகிழ்வார்.

ஆண்டுதோறும் அவர் தவறாமல் செய்துவரும் செயல் இது. இந்த ஆண்டும் அதே போன்று இமாச்சலப் பிரதேசத்தின் லெப்ச்சா என்ற இராணுவ முகாமுக்கு சென்று அங்குள்ள இராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார். அவர்களுக்கு தீபாவளி பலகாரங்களைக் கொடுத்து மகிழ்ந்தார்.

#TamilSchoolmychoice