Home Video ரஜினி முஸ்லீம் வேடத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ முன்னோட்டம்

ரஜினி முஸ்லீம் வேடத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ முன்னோட்டம்

742
0
SHARE
Ad

சென்னை : ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கும் படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படம். உண்மையிலேயே கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமும் திறமையும் கொண்ட விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். லைக்கா புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதற்குக் காரணம், ரஜினி சிறிது நேரமே வரக் கூடிய கௌரவ வேடத்தில் நடித்திருப்பதுதான்.

அதிலும் மொய்தீன் பாய் என்ற முஸ்லீம் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். லால் சலாம் படத்தின் முன்னோட்டம் இன்று தீபாவளியன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice

0000000000