Home அரசியல் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களித்தால் வேலை பறிபோகும் என்பதா? டத்தோ அம்பிகா கண்டனம்

குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களித்தால் வேலை பறிபோகும் என்பதா? டத்தோ அம்பிகா கண்டனம்

694
0
SHARE
Ad

Ambigaகோலாலம்பூர், ஏப்ரல் 26- ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு வாக்களித்தால் வேலை பறி போகும், கல்வி கடனுதவிகள் ரத்து செய்யப்படும் என்று சில தரப்பினர் கூறிவருவது கடும் கண்டனத்திற்குரியது என்று டத்தோ அம்பிகா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்களிப்பது அவரவரின் சொந்த விருப்பம் என்றும், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு அல்லது வேட்பாளருக்கு வாக்களிக்கக்கூடாது யாரையும் கட்டாயப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்று கூறிய அம்பிகா, இது போன்ற மிரட்டல்களுக்கு வாக்காளர்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சில பல்கலைக்கழக மாணவர்களிடம் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருவதாகவும், அப்படி வாக்களிக்க வில்லை என்றால் அவர்களது கல்விக்கடனுவிகளை ரத்து செய்துவிடுவோம் என்று மிரட்டுவதாக புகார்கள் வந்ததையடுத்து மேற்கண்ட அறிக்கையை அம்பிகா சீனிவாசன் வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

 

Comments