மலேசியாவின் அதிக நேயர்களைக் கொண்ட
தமிழ் வானொலி ராகா
அறிவிப்பாளர்கள் வரிசை புதுப்பிக்கப்பட்டுள்ளது –
ஜனவரி 8 முதல் அமலுக்கு வருகிறது
பிறந்திருக்கும் புத்தாண்டில் ராகா அறிவிப்பாளர்கள் புதுப்பிப்பைப் பற்றிய சில விவரங்கள்:
ஜனவரி 8, இன்று முதல் அமலுக்கு வரும் 2024-ஆம் ஆண்டின் அனைத்து அங்கங்களுக்கான அறிவிப்பாளர்கள் வரிசையின் புதுப்பிப்பை மலேசியாவின் முதல் தமிழ் வானொலித் தரமான ராகா அறிவித்தது.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ‘உலகம் விருதில்’ ‘ஆண்டின் பிரபலமான அறிவிப்பாளர்’ விருதை வென்ற உதயா, விகடகவி மகேனுடன் இணைந்துச் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள், ட்ரெண்டிங் தலைப்புகள் மற்றும் பல அறிவிப்புகளைக் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒலியேறும் கலக்கல் காலை அங்கத்தில் இரசிகர்களுக்கு வழங்குவார்.
‘அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2022’- இன் வெற்றியாளரான விக்கி என்று அன்புடன் அழைக்கப்படும் விக்னேஸ்வரி சுப்ரமணியத்தை வணக்கம் ராகா அங்கத்தின் அறிவிப்பாளராக ராகா வரவேற்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, விக்கி தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் தலைப்புகளைப் பற்றியத் தகவல்களைப் பகிர்ந்து நேயர்களை மகிழ்விப்பார்.
மதியம் 1 மணி முதல் 4 மாலை மணி வரை ஒலியேறும் ‘இன்னிக்கி என்ன கதை அங்கத்தை ரேவதி தொடர்ந்துத் தொகுத்து வழங்குவார். சமீபத்தியத் தலைப்புகளைச் சார்ந்தச் சில நுண்ணறிவுகளை இரசிகர்களுக்கு அவர் வழங்குவார்.
சுரேஷ் மற்றும் அஹிலா இருவரும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஒலியேறும் ஹைப்பர் மாலை அங்கத்தின் அறிவிப்பாளர்களாகத் தங்கள் பயணத்தைத் தொடங்குவர். இரசிகர்கள் கேட்டு மகிழச் சிறந்தப் பாடல்களை ஒலியேற்றுவதோடு அவர்கள் திட்டமிட்டப் பயணத்தை மேற்கொள்ளப் போக்குவரத்து அறிவிப்புகளையும் வழங்குவர்.
இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, கோகுலன் ‘வாங்க பழகலாம்’ அங்கத்தின் அறிவிப்பாளராகத் தொடர்ந்து இரசிகர்களை மகிழ்விப்பார். விளையாட்டுகள், சுவாரஸ்சியமானத் தலைப்புகள் மற்றும் வேடிக்கையான மீம்ஸ்கள் ஆகியவற்றைப் பற்றியத் தகவல்கள் இந்நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
மேல் விபரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.