Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ஜனவரி 24 & 25 தேதிகளில் வானவில் அலைவரிசை 201-இல் 24 மணி...

ஆஸ்ட்ரோ : ஜனவரி 24 & 25 தேதிகளில் வானவில் அலைவரிசை 201-இல் 24 மணி நேரத் தைப்பூச நேரலை

320
0
SHARE
Ad

*ஜனவரி 24 & 25 தேதிகளில் ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் முதல் 24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பைக் கண்டு மகிழுங்கள்

*பத்து மலை, ஜார்ஜ்டவுன், ஈப்போ மற்றும் சுங்கைப்பட்டானி ஆகிய நகர்களிலுள்ள ஆலயங்களில் இருந்து நேரலை ஒளிபரப்பு.

கோலாலம்பூர் – தைப்பூசத்தின் 24 மணி நேர நேரலை ஒளிபரப்பை ஜனவரி 24, இரவு 9 மணி முதல் ஜனவரி 25, இரவு 9 மணி வரை ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) வாயிலாக தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகிய தளங்களில் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன்

இந்த முதல் 24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பு, பத்து மலை, ஜார்ஜ்டவுன், ஈப்போ மற்றும் சுங்கைப்பட்டாணி ஆகியவற்றிலுள்ள புகழ்பெற்ற உள்ளூர் ஆலயங்களின் நேரலை அறிவிப்புகளைப் பகிர்ந்துக் கொள்ளும் 19 தொகுப்பாளர்கள் வரிசையை உள்ளடக்கிய முதல் தொடர்ச்சியான தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பாகும். மேலும், அனைத்து மலேசியர்களும் ராகாவில் பக்திப் பாடல்களைக் கேட்டு இரசிக்கலாம்.

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “எங்களின் வருடாந்திரச் சிறப்பு நிகழ்ச்சிகளின் அணிவகுப்பில் தைப்பூச நேரலை ஒளிபரப்பு எப்போதும் முக்கியமான ஒன்றாகும். ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் இடம்பெறும் இந்த ஆண்டின் 24 மணி நேர நேரலை ஒளிபரப்பு, தொலைக்காட்சியில் எங்களின் தைப்பூச நேரலை ஒளிபரப்பின் 12-வது ஆண்டை (மாமாங்கம்) குறிக்கிறது. முதல் முறையாகக் தொலைக்காட்சியில் இடம்பெறும் 24 மணி நேரத் தைப்பூச நேரலை ஒளிபரப்பு, மொத்தம் 19 தொகுப்பாளர்களுடன், எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் வசதியாக இருந்துக் கொண்டே பல்வேறு கோயில்களிலிருந்து உடனுக்குடனான நிலவரங்களையும் காட்சிகளையும் கண்டு மகிழ வழிவகுப்பதால் இது அவர்களின் அனுபவத்தை இன்னும் குறிப்பிடத்தக்கத்தாக்குகிறது.

டாக்டர் என்.தர்மலிங்கம்
#TamilSchoolmychoice

#நன்றிகந்தா கருப்பொருளுக்கு ஏற்ப, பேராசிரியர் டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன், டாக்டர் என்.தர்மலிங்கம் நடராஜன், வரதராஜு லோகநாதன் மற்றும் சில்லாலி எஸ்.கந்தசாமி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக்கொண்டு இவ்விழாப் பற்றிய நுண்ணறிவுத் தகவல்களைப் பார்வையாளர்களுக்கு வழங்குவார்கள். எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்காக எங்களின் மணமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு தைப்பூசத்தைக் கொண்டாடுபவர்களுக்கு நாங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.

வரதராஜூ லோகநாதன்

பின்வரும் ஆலயங்கள் உட்ப்பட உள்ளூர் ஆலயங்களில் இருந்து நேரலை ஒளிபரப்பைச் சோதிராஜன் பரஞ்சோதி, மீனாகுமாரி கடியப்பன், சுஷ்மிதா முருகன், கண்ணா சிம்மாதிரி, கோமதி வேலுபிள்ளை, உதயா, ரேவதி பாவதாஸ், மகேன், அருணா ராஜ் தேவராஜு, இந்துமதி சுப்பிரமணியம், சுரேஸ் திருகன சம்பந்தன், மகேந்திரன் வேலுபிள்ளை, ஸ்ரீ குமரன் முனுசாமி, ரேவதி மாரியப்பன், குணசீலன் சிவக்குமார், கபில் கணேசன், சிவராஜ், விக்கி மற்றும் ‘அல்டிமேட் ஸ்டார் சர்ச் 2023’ வெற்றியாளர் விக்னா முத்துசாமி ஆகியோர் தொகுத்து வழங்குவர்:

o பத்து மலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி தேவஸ்தானம் (சிலாங்கூர்)
o அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் (ஜார்ஜ்டவுன், பினாங்கு)
o கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம் (ஈப்போ, பேராக்)
o ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் புன்தோங் (ஈப்போ, பேராக்)
o ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் ஆலயம் (சுங்கைப்பட்டாணி, கெடா)

அதுமட்டுமின்றி, தைப்பூசம் மற்றும் ‘பூச நட்சத்திரத்தின்’ முக்கியத்துவம், ‘ஆறுபடை வீடு’ கோயில்கள்’ மற்றும் முருகப்பெருமானின் வரலாறு, அபிஷேகத்தின் நோக்கம் மற்றும் நன்மைகள் மற்றும் பல தலைப்புகளைப் பற்றியத் தகவல்களை விருந்தினர்கள், பேச்சாளர்கள் வழங்குவதைக் கண்டு மகிழ்வதோடு உலகெங்கிலும் உள்ளக் கோவில்களில் இருந்து தைப்பூச ஒளிபரப்பையும் வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம். வானொலி முன்னணியில், மலேசியர்கள் 24 மணி நேரப் பக்திப் பாடல்களை ராகா வாயிலாக வானொலி அல்லது SYOK செயலி வழியாகக் கேட்டு மகிழலாம்.

மேல் விபரங்களுக்கு ஆஸ்ட்ரோ உலகம் எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.