Home இந்தியா சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை – நலமுடன் உள்ளார்!

சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை – நலமுடன் உள்ளார்!

247
0
SHARE
Ad
சத்குரு ஜக்கி வாசுதேவ்

சென்னை : இந்தியாவின் முக்கிய ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அவரின் மூளைப் பகுதியில் பல இடங்களில் இரத்தக் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து அவசர அறுவைச் சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தலைமையேற்றிருக்கும் ஈஷா அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.

அண்மையில் இந்தியா டுடே ஊடகம் நடத்திய இந்தியா கொன்கலேவ் (India Conclave) கலந்துரையாடல் கூட்டத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் கலந்து கொண்டு உற்சாகமாக பல கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.

#TamilSchoolmychoice

அவர் நலமுடன் உள்ளார் என அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனையின் அறிக்கை தெரிவித்தது.