Home நாடு கோலகுபு பாரு (சிலாங்கூர்) சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் காலமானார்!

கோலகுபு பாரு (சிலாங்கூர்) சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் காலமானார்!

302
0
SHARE
Ad

கோலகுபுபாரு : சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியின் பெண் சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் (படம்) இன்று வியாழக்கிழமை (21 மார்ச்) காலமானார். அவர் புற்று நோய் பாதிப்பால் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 3 தவணைகளாக கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதியை ஜசெக சார்பில் லீ தற்காத்து வந்தார். கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் அவர் அந்தத் தொகுதியில் 4,119 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

46.4 விழுக்காடு மலாய் வாக்காளர்களையும், 30.7 விழுக்காடு சீன வாக்காளர்களையும் 18 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும் கொண்டது கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதி.