Home நாடு அன்வார் இப்ராகிம் இளம் வயதில் சமயபோதனை வழங்கிய ஆசிரியரைச் சந்தித்தார்!

அன்வார் இப்ராகிம் இளம் வயதில் சமயபோதனை வழங்கிய ஆசிரியரைச் சந்தித்தார்!

271
0
SHARE
Ad

புக்கிட் மெர்தாஜம் : தனது பூர்வீக கிராமமான செரோக் தோக் கூன் பகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அங்கு தன் இளமைக் கால நினைவுகளை மறவாமல், தனக்கு 4 முதல் 6 வயதாக இருக்கும்போது இஸ்லாமிய சமய போதனை வழங்கிய ஆசிரியை உஸ்தாசா சால்மா அபு பாக்காரை சந்தித்து நலம் விசாரித்தார்.

அன்வாருடன் அவரின் துணைவியார் வான் அசிசாவும் உடன் வந்திருந்தார்.

செரோக் தோக் கூன்னிலுள்ள மதராசா அல் இத்திஹாடியா அல் வாத்தானியா பள்ளி வாசலில் உஸ்தாசா சால்மாவிடம் அடிப்படை இஸ்லாமியக் கல்வியைப் பெற்றதை அன்வார் நினைவு கூர்ந்ததோடு அவரைச் சந்தித்த புகைப்படத்தையும் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த கால நினைவுகளை தன் முன்னாள் ஆசிரியையுடன் நீண்ட நேரம் உரையாடி பகிர்ந்து கொண்டதாகவும், அவரின் குடும்ப உறுப்பினர்களையும், அண்டை வீட்டாரையும் நலம் விசாரித்ததாகவும் அன்வார் குறிப்பிட்டார்.