புத்ரா ஜெயா : அரசாங்கம் முட்டைகளின் விலையை 3 காசாக குறைத்திருப்பது குறித்து பல்வேறு சர்ச்சைக் கருத்துகள் வெளியிடப்பட்டு வரும் வேளையில் ஏன் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் விளக்கினார்.
நாட்டு மக்கள், அதிலும் குறைந்த வருமானம் பெறுவோர், மிக அதிகமாகப் பயன்படுத்தும் உணவுப் பொருள் முட்டை எனக் குறிப்பிட்ட அன்வார்,ஏற்கனவே டீசல் விலை நிர்ணயத்தை அரசாங்கம் அமுல்படுத்தி வருவதும் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவினங்களின் சுமையைக் குறைப்பதற்கான திட்டங்களில் ஒன்று எனத் தெரிவித்தார்.
மேலும் பல உணவுப் பொருட்களை விலை குறைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் எனவும் அன்வார் உறுதியளித்தார். அதன் மூலம், மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமையை குறைப்பதற்கான மாற்று வழிகளையும் அரசாங்கம் ஆராயும் என அன்வார் மேலும் தெரிவித்தார்.