Home நாடு பிரதமர் வெளிநாட்டுப் பயணங்கள்: செலவோ 13.7 மில்லியன் ரிங்கிட் – பயன்களின் மதிப்போ பில்லியன் கணக்கில்!

பிரதமர் வெளிநாட்டுப் பயணங்கள்: செலவோ 13.7 மில்லியன் ரிங்கிட் – பயன்களின் மதிப்போ பில்லியன் கணக்கில்!

190
0
SHARE
Ad
2 நவம்பர் 2024-இல் நடைபெற்ற புள்ளி விவர இலாகாவின் 75-ஆம் ஆண்டு நிறைவு விழாவின்போது உரையாற்றும் அன்வார்…

கோலாலம்பூர்: பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 4) தொடங்கி நான்கு நாட்களுக்கு சீனாவுக்கு வருகை மேற்கொள்கிறார். அங்கு அவர் சீனப் பிரதமரையும் சீன அதிபரையும் மரியாதை நிமித்தம் சந்திப்பார். சீனப் பிரதமர் அழைப்பின் பேர் சீனா செல்லும் அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமட் ஹாசான், அனைத்துலக வாணிப அமைச்சர் தெங்கு சாப்ருல், மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோரும் உடன் செல்கின்றனர்.

ஷாங்காய் நகரில் நடைபெறும் அனைத்துலகக் கண்காட்சியிலும் அன்வார் பங்கு கொள்வார்.

இதற்கிடையில்,  நவம்பர் 2022-இல் பிரதமரானது முதல் இன்று வரையில் பிரதமராக அன்வார் மேற்கொண்ட பல வெளிநாட்டுப் பயணங்களுக்காக 13.7 மில்லியன் ரிங்கிட் செலவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பிரதமர் ஆனது முதல் அன்வார் இப்ராகிம் இதுவரையில் 39 நாடுகளுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார். 22 நாடுகளுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டிருந்தார்.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை இந்த வெளிநாட்டுப் பயணங்களுக்கான  செலவினங்கள் 13.7 மில்லியன் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில், இந்தப் பயணங்கள் மூலம் நாட்டுக்கு பெருமளவில் நன்மைகள் கிடைத்திருக்கின்றன.

குறிப்பாக ஜனவரி 2024 முதல் மே 2024 வரை பிரதமரின் பயணங்கள் மூலம் நமது நாட்டுக்குக் கிடைத்திருக்கும் உத்தேச முதலீடுகளின் மதிப்பு 77.58 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விவரங்களை பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச பிரிவுக்கான அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

மேலும் 2023-ஆம் ஆண்டில் பிரதமரின் பயணங்கள் மூலம் நாட்டுக்கு கிடைத்திருக்கும் முதலீடுகளின் மதிப்பு ஏறத்தாழ 353.6 பில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்படுகிறது.