Home Video அஜித் நடிப்பில் விடாமுயற்சி : பொங்கல் வெளியீடு – பரபரப்பான முன்னோட்டம்!

அஜித் நடிப்பில் விடாமுயற்சி : பொங்கல் வெளியீடு – பரபரப்பான முன்னோட்டம்!

182
0
SHARE
Ad

சென்னை : எப்போது வரும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி தாமதப்படுத்துகிறார் என குறைகூறல்கள் எழுந்தாலும் படம் சிறப்பாக உருவாகியிருப்பதாகத் தகவல்.

படம் முழுக்க அஜித் வெள்ளை முடி, வெண்தாடியுடன் தோன்றுகிறார். பரபரப்பான காட்சிகளைக் கொண்ட இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டு பரவலான அளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்பையும் முன்னோட்டம் கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

நாயகியாக திரிஷா அஜித்துடன் இணைகிறார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாக உருவாகியிருக்கிறது விடாமுயற்சி. படத்தில் வில்லனாக வலம் வருபவர் அர்ஜூன். அதனால் பரபரப்பும் கூடியிருக்கிறது. ஏற்கனவே மங்காத்தா படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார் அர்ஜூன்.

விடாமுயற்சி படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் கண்டு மகிழலாம்: