Home நாடு முஸ்லீம் அல்லாதோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முஸ்லீம்களுக்கான வழிகாட்டிகள் – சரவணன் சாடினார்! பிரதமர் தலையிடக் கோரிக்கை!

முஸ்லீம் அல்லாதோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முஸ்லீம்களுக்கான வழிகாட்டிகள் – சரவணன் சாடினார்! பிரதமர் தலையிடக் கோரிக்கை!

56
0
SHARE
Ad
டத்தோஸ்ரீ எம்.சரவணன்

கோலாலம்பூர்: மலேசியாவில் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்களின் நல்லிணக்கமும், ஒற்றுமையும் எப்போதுமே அனைத்துலக அளவில் பாராட்டப்படும் ஓர் அம்சம். இந்தியர்களின் நிகழ்ச்சிகளில் முஸ்லீம்கள் கலந்து கொள்வது  என்பது – அவை ஆலயங்களாக இருந்தாலும் சரி – பொது இடங்களாக இருந்தாலும் சரி – வழக்கமாக நம் நாட்டில் நடைபெறும் ஒன்று.

இந்நிலையில் முஸ்லீம் அல்லாதோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முஸ்லீம்களுக்கான வழிகாட்டிகளை இஸ்லாமியத் துறை விவகாரங்களுக்கான அமைச்சு வெளியிட்டிருப்பது பலதரப்புகளிடையே சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.

குறிப்பாக, தேர்தல் காலங்களில் முஸ்லீம் அரசியல்வாதிகள் முஸ்லீம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களுக்கு பிரச்சாரங்களுக்காக வருகை தருவதும் – தைப்பூசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் – மலேசியாவில் நாம் எப்போதும் காணும் காட்சி. இதுவரையில் இதுகுறித்து யாரும் சர்ச்சைகளை எழுப்பியதில்லை.

#TamilSchoolmychoice

இத்தனை காலத்திற்குப் பிறகு ஏன் இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சு இந்த பிரச்சனையைப் புதிதாக கிளப்புகிறது என்ற கண்டனங்கள் புறப்பட்டிருக்கின்றன.

மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இந்தப் புதிய வழிகாட்டிகள் குறித்து சாடியிருக்கிறார். பிரதமர் உடனடியாக இதில் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதற்கிடையில் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் நைம் மொக்தார், இந்தப் பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்.