Home நாடு ஊழல் தடுப்பு ஆணையம், ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பர்ட் தே, சோபியா ரினி மூவரைக் கைது செய்தது!

ஊழல் தடுப்பு ஆணையம், ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பர்ட் தே, சோபியா ரினி மூவரைக் கைது செய்தது!

210
0
SHARE
Ad
ஷாம்சுல் இஸ்கண்டார்

புத்ரா ஜெயா: சபா கனிம வள சுரங்க ஊழல் புகார்களில் சிக்கியுள்ள பிரதமர் அன்வார் இப்ராகிமின் முன்னாள் அரசியல் செயலாளர் ஷாம்சுல் இஸ்கண்டார், அவர்மீது புகார்களைக் கூறிய ஆல்பர்ட் தே ஆகிய இருவருடன் சோபியா ரினி புயோங் என்ற பெண்மணியும் ஊழல் தடுப்பு ஆணையத்தினரால் கைது செய்யப்பட்டார்.

ஆல்பர்ட் தே என்ற குவாந்தான் வணிகர் சபா கனிம வள சுரங்கக் குத்தகைகளைப் பெற பல அரசியல்வாதிகளுக்கு கையூட்டு வழங்கியதாக காணொலிகளுடன் ஆதாரங்களை வெளியிட்டிருப்பது சபா சட்டமன்றத் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து இன்று மேற்குறிப்பிட்ட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆல்பர்ட் தே துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டதாக அவரின் மனைவி புகார் கூறியுள்ளார்.