Home 13வது பொதுத் தேர்தல் லெம்பா பந்தாய் தொகுதியில் இருக்கும் 16,500 ஆவி வாக்காளர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் – நூருல்...

லெம்பா பந்தாய் தொகுதியில் இருக்கும் 16,500 ஆவி வாக்காளர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் – நூருல் இசா

450
0
SHARE
Ad

nurul-izzah-anwar-300x199கோலாலம்பூர், மே 3- வரும் 13ஆவது பொதுத்தேர்தல் அனைத்து கட்சிகளுக்கு சவாலாக இருக்கும் வேளையில் தற்போது ஆவி வாக்காளர்கள் பிரச்சினை தலை தூக்கி வருகிறது.

அந்த வகையில் லெம்பா பந்தாய் நாடாளுமன்றத்தில் 16,500 ஆவி வாக்காளர்கள் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கெஅடிலான் உதவித் தலைவர்களில் ஒருவரான நூருல் இசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் அப்போதைய மகளிர் குடும்ப நல அமைச்சர் டத்தோஸ்ரீ ஷரிஸாட் விட 2,895 வாக்குகள் அதிகமாக நூருல் இசா பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இம்முறை இத்தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் வெற்றி பெற பாடுபட்டு வருகின்றனர். ஆனால் அத்தொகுதியில் கடந்த வாரம் 5,000 ஆவி வாக்காளர்கள் வரை இருப்பர் என்று தெரிவித்த நூருல் இசா தற்போது 16,500 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவித்தார்.

இந்த ஆவி வாக்காளர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுக்கோள் விடுத்தார். அதில் 2,000 பேர் அஞ்சல் வாக்காளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.