Home நாடு முதல் பெண் பிரதமராக நூருல் இசா வருவார் – டத்தோ அம்பிகா நம்பிக்கை

முதல் பெண் பிரதமராக நூருல் இசா வருவார் – டத்தோ அம்பிகா நம்பிக்கை

536
0
SHARE
Ad

ambigaகோலாலம்பூர், மே 3- லெம்பா பந்தாய் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நூருல் இசா குறித்து  டத்தோ அம்பிகா உரையாற்றுகையில்,

“சிறந்த மதி நுட்பமும், துணிச்சலும் கொண்டவர் நூருல் இசா. நிச்சயம் ஒரு நாள் அவர் நாட்டின் பிரதமர் பதவியை ஏற்பார்” என்றார்.

“இது வரை மலேசியாவில் பெண் பிரதமர் பதவி வகித்ததில்லை. முதன் முறையாக நூருல் இசா ஒரு பெண் பிரதமராக வருவார்” என 5,000 பேர் மத்தியில் அம்பிகா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“யாரும் பயப்படாமல் வாக்களியுங்கள். வாக்களிப்பது உங்கள் உரிமை. சிலர் கூறுவது போல சில கட்சியினருக்கு வாக்களித்தால் உங்கள் வேலை, கல்வி கடனுதவி ஆகியவை பாதிக்கப்படும் என்று கூறுவது எல்லாம் அப்பட்டமான பொய். அதை நம்ப வேண்டாம்” என்று மீண்டும் டத்தோ அம்பிகா வலியுறுத்தினார்.

லெம்பா பந்தாயில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஷாஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட், கெஅடிலான் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் ஆகியோர் பங்கேற்று நியாயமான ஆட்சி அமைய மக்கள் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.