Home அரசியல் மக்களாட்சி மலர வேண்டும் என்பதற்காக மக்கள் கூட்டணி பிரச்சாரத்திற்கு அலையென மக்கள் திரள்கின்றனர் – அன்வார்...

மக்களாட்சி மலர வேண்டும் என்பதற்காக மக்கள் கூட்டணி பிரச்சாரத்திற்கு அலையென மக்கள் திரள்கின்றனர் – அன்வார் இப்ராகிம்

483
0
SHARE
Ad

ANWARகாப்பார்,மே3- புத்ரா ஜெயாவை கைப்பற்ற இன்னும் சில தினங்களே உள்ளன. அதன்பின் மக்கள் சுபிட்சமான வாழ்க்கையை நிச்சயம் பெறுவர் என்று காப்பார் வட்டாரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின் கலந்து கொண்ட 10 ஆயிரம் பொதுமக்கள் முன்னிலையில் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இனி மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் கூட்டணி பிரச்சாரக் கூட்டத்திற்கு வருபவர்கள் என்னையோ அல்லது லிம் கிட் சியாங்கை பார்ப்பதற்கோ வருவதில்லை. நல்லாட்சி மலர வேண்டும் என்ற நோக்கிலேயே அவர்கள் அலையென திரண்டு வருவதாக அவர் தெரிவித்தார். அவர்களின் எண்ணம் ஒரு சில தினங்களில் நிறைவேறும் என்றும் அவர் கூறினார்.

இந்த பொதுத்தேர்தலில் என்னையும், லிம் கிட் சியாங்கையும் வீழ்த்த வேண்டும் என்று துன் மகாதீர் கூறி வருகிறார். அவ்வாறு எங்களை வீழ்த்தி விட்டால் அவரின் மகன்களை உயர்ந்த பதவியில் அமர்த்தி விடலாம் என்ற எண்ணமே என்றார் அன்வார்.

#TamilSchoolmychoice

உங்களுக்கு பலர் பல அன்பளிப்புகளை வழங்குவர். அவைகளை வேண்டாம் என்று சொல்லாமல் ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் வாக்குகளை விவேகமான முறையில் யோசித்து மக்கள் கூட்டணிக்கு வாக்களித்து மக்களாட்சி மலர உதவுங்கள் என்று அன்வார் கேட்டுக் கொண்டார்.