Home அரசியல் பக்காத்தான் வெற்றியை தேர்தல் முறைகேடுகள் மற்றுமே பறிக்க முடியும் – அன்வார் உறுதி

பக்காத்தான் வெற்றியை தேர்தல் முறைகேடுகள் மற்றுமே பறிக்க முடியும் – அன்வார் உறுதி

529
0
SHARE
Ad

Anwarகோலாலம்பூர், மே 4-  “பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி பெரும்பான்மையில் வெற்றியடைய வாய்ப்பு உண்டு, ஆனால் தேர்தல் முறைகேடுகளால் அவ்வெற்றி பாதிக்கப்படலாம்” என்று எதிர்க் கட்சித்  தலைவர் அன்வார் இப்ராகிம் கவலை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய செய்தி நிறுவனமான ஏ.பி.சி (Australian Broadcasting Corporation) க்கு அன்வார் அளித்துள்ள பேட்டியில் இது பற்றி கூறியிருப்பதாவது:-

“வரும் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில், மக்கள் கூட்டணி பெரும்பான்மையான வெற்றியை அடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் தேர்தல் முறைகேடுகள் அவ்வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்”

#TamilSchoolmychoice

“அஞ்சல் வாக்காளர்கள் என்பவர்கள் மலேசிய காவல் துறையிலோ அல்லது மலேசிய ஆயுதப் படையிலோ பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும்.”

“ஆனால் அஞ்சல் வாக்காளர் பட்டியலை சோதனையிட்டபோது அதில் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள், பாகிஸ்தானியர்கள், இந்தோனேசியர்கள் ஆகியோர் வாக்காளர்களாக இருப்பதைக் கண்டறிந்தோம்.”

“இது போன்ற தேர்தல் முறைகேடுகள் நடந்தால், நியாயமான முறையில் செயல்பட்டுவரும் மக்கள் கூட்டணியின் வெற்றி பாதிக்கப்படும்”

– என்று அன்வார் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

அதோடு, 28,000 க்கும் மேற்பட்ட பிலிப்பினோக்காரர்கள் மற்றும் இந்தோனேசியர்கள் சபாவில் உள்ளனர் என்றும், அவர்கள் சிலாங்கூருக்கு வந்து வாக்களிப்பார்கள் என்றும் கூறிய அன்வார், இந்த தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையமும் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.