Home கலை உலகம் கௌதமை ஓரங்கட்டிய விக்ரம் பிரபு

கௌதமை ஓரங்கட்டிய விக்ரம் பிரபு

663
0
SHARE
Ad

vikramசென்னை, மே 4- கொலிவுட்டில் நவரச நாயகனின் வாரிசை விட, பிரபுவின் மகனான விக்ரம் பிரபுக்கு அதிகளவு வாய்ப்புகள் வருகிறது.

கடல் படத்தில் நடித்த நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கெளதமுக்கு அதன் பின்பு படங்கள் கிடைப்பதே பிரச்சினையாக இருந்தது.

அப்படியே படங்கள் கிடைத்த போதும் அவர்களிடம் அதிகளவு சம்பளம் கேட்டு அதிர வைத்தார் கார்த்திக்.

#TamilSchoolmychoice

இதனால் பலரும் கௌதமை ஓரங்கட்ட ஆரம்பிக்கவே, தனது பந்தாக்களை விட்டு விட்டு என் மகனின் சம்பளத்தை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று நைசாக நழுவிக் கொண்டார் நவரசம்.

ஆனால், கும்கி படத்தில் அறிமுகமான விக்ரம் பிரபுவின் தந்தையான பிரபு அப்படியில்லை.

மகன் விடயத்தில் அவர் தலையிடுவதே இல்லை. யாராவது கதை சொல்ல வந்தால், அவரிடமே சொல்லுங்கள்.

அவருக்கு பிடித்திருந்தால் திகதி தருவார். அவரை வைத்த நல்ல விதமாக படத்தை பண்ணுங்கள் என்று கூறிவிட்டு விலகிக் கொள்கிறார்.

அதுமட்டுமின்றி, சம்பள விடயத்தில் கூட பெரிதாக கெடுபிடி செய்வதில்லையாம்.

இப்போது தான் மகன் வளர்ந்து வருகிறார். இந்த நேரத்தில் சம்பளத்தை விட நல்ல கதையும், நல்லவிதமாக படம் பண்ணும் இயக்குனர்களும் தான் தேவை என்பதை உணர்ந்து செயல்படுகிறார்.

இதனால் கெளதமை விட விக்ரம் பிரபுவை வைத்து படம் பண்ணவே கோடம்பாக்கத்தினர் ஆர்வமாக உள்ளனர்.