Home அரசியல் “மலேசிய அரசியலில் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் இருக்கிறது” – அன்வார் இப்ராகிம்

“மலேசிய அரசியலில் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் இருக்கிறது” – அன்வார் இப்ராகிம்

545
0
SHARE
Ad

anwar feature

கோலாலம்பூர், மே 6 – மலேசிய அரசியலில் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் நிறைய இருப்பதால் இப்போதைக்கு அரசியலில் இருந்து விலகுவது பற்றி யோசிக்கவில்லை என்று எதிர்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் மலேசியா கினி இணையதளத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

மேலும் 13 ஆவது பொதுத்தேர்தல் முடிவுகள் தேசிய முன்னணிக்கு சாதகமாக அமைந்தது குறித்து தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய அன்வார், ஆவி வாக்காளர்கள் பிரச்சனையில் தேர்தல் ஆணையம் முறையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், 89 நாடாளுமன்ற தொகுதிகளை வென்ற மக்கள் கூட்டணை இன்னும் பல தொகுதிகளை வென்று மத்திய அரசாங்கத்தை அமைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதோடு “13 ஆவது பொதுத்தேர்தல் அம்னோ மற்றும் தேசிய முன்னணியால் திருடப்பட்டுவிட்டது அதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே தேர்தல் ஆணையத்தின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் நாங்கள் தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம்.” என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

“என் வாழ்நாள் முழுவதையும் பிரச்சாரங்களுக்காக செலவிட்டுள்ளேன். மக்கள் கூட்டணியின் கடைசி நேரப்பிரச்சாரங்களில் கூட 50,000 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்களது மகத்தான ஆதவரைத் தெரிவித்தனர். ஆனால் இவ்வளவு போராடியும், கடுமையாக உழைத்தும் தேர்தலில் பல முறைகேடுகள் நடந்து வெற்றியை பறித்துவிட்டது. அதற்கு எங்களிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கிறது. அதற்கு தேர்தல் ஆணையம் பதில் கூறியே ஆக வேண்டும்” என்று கண்ணீரோடு அன்வார் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு, ஜோகூரின் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய அன்வார், எதிர்கட்சிகளின் தலைவராக இருந்து பொதுத்தேர்தலில் மத்திய அரசாங்கத்தை கைப்பற்றும் தனது கடைசி முயற்சி இதுதான் என்றும், அவ்வாறு வெற்றி பெறவில்லை என்றால் அரசியலில் இருந்து விலகி, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று  தனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் பணியை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது தொடர்ந்து அரசியலில் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற 13 ஆவது போதுத்தேர்தலில் மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 133 தொகுதிகளை தேசிய முன்னணியும், 89 தொகுதிகளை மக்கள் கூட்டணியும் கைப்பற்றியுள்ளது. மக்கள் கூட்டணி மத்திய அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பை இம்முறையும் தவறவிட்டதால் எங்கே அன்வார் அரசியலில் இருந்து விலகி விடுவாரோ என்று கவலையடைந்த அவரது ஆதரவாளர்கள், அன்வார் தொடர்ந்து அரசியலில் இருக்கப்போவதாக அறிவித்துள்ளதால் நிம்மதி அடைந்துள்ளனர்.