Home உலகம் கேட்டுக்கு பிறக்க போவது ஆண் குழந்தை- உண்மையை வெளியிட்டார் இளவரசர் ஹாரி

கேட்டுக்கு பிறக்க போவது ஆண் குழந்தை- உண்மையை வெளியிட்டார் இளவரசர் ஹாரி

616
0
SHARE
Ad

kate-williamபிரிட்டன், மே 6- பிரிட்டன் இளவரசியும், தனது அண்ணியுமான கேட் மிடில்டன்னுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்று இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது காதலியான கேட் மிடில்டன்னை மணந்து கொண்டார். தற்போது கேட் கர்ப்பமாக உள்ளார். அவருக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று பலரும் யூகித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இளவரசர் ஹாரி பார்ப்பவர்களிடம் எல்லாம் வில்லியம் மற்றும் கேட்டுக்கு ஆண் குழந்தை பிறக்கப்போகிறது என்று கூறி வருகிறாராம். ராஜ குடும்பம் மொத்தமும் ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்ற சந்தோஷத்தில் உள்ளது.

#TamilSchoolmychoice

இவர்கள் குடும்பத்தாருக்கு நெருங்கியவர்களுக்கு மட்டும் கேட்டுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்ற உண்மை தெரிந்துள்ளது. அதனால் அவர்கள் அதற்கு ஏற்ப பரிசுப் பொருட்கள் வாங்க தொடங்கி விட்டனர் என்று கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து வில்லியம் மற்றும் கேட் இதுவரை எதுவுமே தெரிவிக்கவில்லை. அவர்கள் இருவரும் குழந்தைக்கு பெயர் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். அதை அவர்கள் ஹாரி உட்பட யாரிடமும் இப்போதைக்கு தெரிவிக்கப் போவதில்லையாம்.